சற்று முன்



சென்னை, துரைபாக்கத்தில் தனது இரண்டாவது ஆஃப்லைன் மியூசிக் சென்டர் தொடங்கப்படுவதை அறிவிக்கும் ஆர்டியம் அகாடமி !

சென்னை, துரைபாக்கத்தில் தனது இரண்டாவது ஆஃப்லைன் மியூசிக் சென்டர் தொடங்கப்படுவதை அறிவிக்கும் ஆர்டியம் அகாடமி !

சென்னை, 12 அக்டோபர் 2024: இசைக் கல்வியில் சாதனை படைத்திருக்கும் ஆர்டியம் அகாடமி, சென்னை மாநகரில் அதன் இரண்டாவது ஆஃப்லைன் மியூசிக் சென்டர் தொடங்கப்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. ஓஎம்ஆர் சாலையில், துரைபாக்கத்தில், 2024 அக்டோபர் 12 அன்று தொடங்கப்படுகிற இப்புதிய அகாடமி பெரிய விரிவாக்க திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது. பிரபல திரைப்பட பாடகி ஆர்டியம் அகாடமியின் மாஸ்ட்ரோவுமான திருமதி. கேஎஸ் சித்ரா அவர்கள் இம்மாபெரும் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு புதிய இசை மையத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது ஆர்டியம் அகாடமியின் நிறுவனர்கள் திரு. விவேக் ரெய்ச்சா மற்றும் மிஸ். நித்யா சுதிர் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.

2024 ஜுன் 5ம் தேதியன்று ஆழ்வார்பேட்டையில் ஆர்டியம்-ன் முதல் ஆஃப்லைன் சென்டர், 101 முன்-சேர்க்கைகளுடன் தொடங்கி மகத்தான வெற்றியைப் பெற்றிருப்பதைத் தொடர்ந்து இந்த விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஆழ்வார்பேட்டை மையம் மாணவர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. இப்போது 350 ஆர்வமிக்க மாணவர்கள் இங்கு இம்மையத்தில் இசையைக் கற்று வருகின்றனர். பள்ளிக்கரணை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் காரப்பாக்கம் போன்ற சுற்றுப்பதிகளிலும் மற்றும் துரைப்பாக்கத்திலும் உள்ள இசை ஆர்வலரிடமிருந்து ஓஎம்ஆர் பகுதியில் ஒரு இசை கற்றலுக்கான ஒரு மையம் வேண்டும் என்ற தேவை வெளிப்பட்டதன் காணரமாக இந்த இரண்டாவது மையத்தைத் தொடங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இப்புதிய மையத்தை தொடங்கி வைத்து திருமதி. கேஎஸ் சித்ரா பேசுகையில், “எனது பேரன்புக்குரிய சென்னை மாநகரில் ஆர்டியம் அகாடமி 2வது ஆஃப்லைன் இசை மையத்தை தொடங்குவது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இசைக்கல்வியை புரட்சிகரமாக மாற்றுகிற ஒரு கல்வி நிறுவனத்தோடு இணைந்திருப்பதில் நான் அதிகம் பெருமை கொள்கிறேன். பாரம்பரியமான கற்றல் வழிமுறைகளோடு நவீன தொழில்நுட்பத்தையும் கலந்து வழங்கும் ஆர்டியம் அகாடமியின் கற்பித்தல் உண்மையிலேயே சிறப்பானது. வெறுமனே இசைக்கற்றல் என்பதற்கும் இது அதிகமானது; இலயம் மற்றும் தாளம் என்ற உலகளாவிய பொது மொழி வழியாக ஒருவர் தன்னையே கண்டறிந்து கொள்வதை குறித்ததே இசைக்கல்வி. தங்களது வயது அல்லது பின்புலம் எதுவாக இருப்பினும் எங்களோடு இணைந்து இசைக்கற்றல் என்ற ஒரு நிலைமாற்ற பயணத்தில் கலந்து பங்கேற்று அனுபவித்து மகிழ அனைத்து இசை ஆர்வலர்களையும் நான் மனமார ஊக்குவிக்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

ஆர்டியம் அகாடமியின் இணை-நிறுவனர் திரு. விவேக் ரெய்ச்சா கூறியதாவது: “எமது இசைக்கல்வி திட்டங்களுக்கு சென்னையில் காணப்படும் மகத்தான தேவையும் மற்றும் இந்நகரின் இசையை நேசிக்கும் சமூகத்தின் ஆழ்ந்த நம்பிக்கையும் எமது விரிவாக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஆர்டியம் அகாடமியின் புதுமையான ‘பிஜிட்டல்’ இசைக் கல்வியை வழங்குவதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொள்கிறோம். தரமான இசைக்கல்வியை அனைவரும் அணுகி பெருமாறு ஆக்குவதே எமது நோக்கம். எமது இன்டராக்டிவ் டேஷ்போர்டு மற்றும் நிகழ்நேர பின்னறித்தகவலுடன் கூடிய பயிற்சிக்கான ஸ்டுடியோ ஆகிய அம்சங்கள், அவர்களது சொந்த வேத அளவில் தங்களது திறன்களை மாணவர்கள் திருத்திக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் அனுபவிக்கிறது. தனிப்பட்ட பயிற்சி, கற்பித்தலோடு தொழில்நுட்பத்தின் சிறந்த அம்சங்களின் கலவையாக கற்றல் முறை இங்கு இருக்கிறது. சென்னை எங்கிலும் இசைக்கற்பவர்களின் ஒரு துடிப்பான சமூகத்தை வளர்ப்பதிலும் மற்றும் இசையில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை உயர்த்துவதிலும் நாங்கள் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை இந்த 2வது மைய விரிவாக்க நடவடிக்கை பிரதிபலிக்கிறது”. 

துரைப்பாக்கம் அகாடமியில் மிக நவீன வசதிகளும் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்களிடமிருந்து பெறப்படுகிற உயர்தர இசைக்கருவிகளும் இடம்பெறுகின்றன. அனந்த் வைத்தியநாதன், கேஎஸ் சித்ரா, அருணா சாய்ராம் மற்றும் சுபா முட்கல் ஆகியோர் உட்பட புகழ்பெற்ற இசை விற்பன்னர்களால் இணைந்து வடிவமைக்கப்பட்டிருக்கிற ஆர்டியம்-ன் இசைக்கல்வி திட்டமானது பல நூற்றாண்டுகால இசை ஞானத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது. நிகரற்ற கற்றல் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த அகாடமியின் ஆசிரியர்கள் சிறப்பு கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு, திறமையானவர்களாக தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றனர். 

ஓஎம்ஆர் துரைப்பாக்கத்தில் சிறப்பான அமைவிடத்தில் இடம்பெற்றிருக்கும் புதிய அகாடமி, குழந்தைகள், மாணவர்கள், பணியாற்றும் தொழில்முறை அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் பணி ஓய்வுபெற்ற நபர்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கும் சேவையாற்றுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் எண்ணற்ற பணி நிறுவனங்களில் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் தொகை ஓஎம்ஆர்-ல் இருப்பதால், இசை கற்க விரும்பும் அதிக நபர்களை சென்றடைவதற்கு உகந்த மையமாக துரைப்பாக்கம் இருக்கிறது. இசையை கற்க விரும்புகிற எந்தவொரு நபருக்கும் இம்மையம் சிறப்பான சேவையை வழங்கும்.

நிதியாண்டு 2024-25 இறுதிக்குள் இன்னும் 5 அகாடமிகளை தொடங்குவதும் மற்றும் 2025-26 காலஅளவிற்குள் 20+ அகாடமிகளை கொண்டிருப்பதும் ஆர்டியம் அகாடமியின் விரிவான திட்டமாகும். ஆர்டியம் அகாடமி தொடர்ந்து வளர்ச்சியடைகின்றபோது, ஆஃப்லைன் கற்றலின் தனிப்பட்ட கற்பத்தில் முறையை தொழில்நுட்ப மேம்பாடுகளோடு ஒன்றுசேர்க்கிற முதல் தரமான இசைக்கல்வியை வழங்குகிற தனது செயல்திட்டத்தில் தொடர்ந்து தளராத அர்ப்பணிப்புடன் இயங்குகிறது. இந்த புதிய துரைப்பாக்க மையம் இசை கற்றல் மற்றும் படைப்பாக்க திறனுக்கான சிறப்பான மையமாக உருவெடுப்பது நிச்சயம். புத்தாக்கமான இசைக்கல்வியில் முதன்மை அமைப்பாக ஆர்டியம் அகாடமியின் அந்தஸ்தை இது மேலும் உறுதியாக்கும். 

ஆர்டியம் அகாடமி குறித்து

ஆர்டியம் அகாடமி என்பது, செயல்விளைவின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் உலகின் முதல் இசைக்கல்வி செயல்தளமாகும். இங்கு கற்பித்தல் மீது மட்டும் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துவதில்லை; கற்ற இசையை பிறர் அறிய எடுத்துக்காட்ட தனிச்சிறப்பான வாய்ப்புகளை எமது மாணவர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம். இந்திய இசையை உலகளவில் பரப்ப வேண்டும் என்ற செயல்திட்டத்தோடு நிறுவப்பட்ட ஆர்டியம் அகாடமி, இந்தியா மற்றும் வெளிநாடுகள் ஆகிய இரண்டிலுமிருந்தும் பல மாணவர்களை தன்னகத்தே ஈர்த்திருக்கிறது. தொடங்கியதிலிருந்து வெறும் மூன்றே ஆண்டுகளில் 21,000-க்கும் அதிகமான கற்றல் மாணவர்களோடு நாங்கள் மகத்தான வளர்ச்சியடைந்திருக்கிறோம். எமது மாணவர்களுள் 45 விழுக்காட்டினர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை