சற்று முன்



கோலாகலமாக நடந்து முடிந்த சரிகமப சீசன் 4 கிராண்ட் பைனல்.. டைட்டிலை வென்றது யார் தெரியுமா ?


கோலாகலமாக நடந்து முடிந்த சரிகமப சீசன் 4 கிராண்ட் பைனல்.. டைட்டிலை வென்றது யார் தெரியுமா ? 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. 

மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு போட்டியாளர்களை மதிப்பிட்டு வந்தனர். 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நேற்று நேரடியாக ஒளிபரப்பானது. இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியிருந்த ஆறு போட்டியாளர்களும் கடுமையாக போட்டி போட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 

இறுதியாக இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மகிழன் தேர்வாகி உள்ளார். அவருக்கு பரிசு தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் ரன்னராக வடசென்னையை சேர்ந்த ஸ்வேதா மற்றும் இரண்டாவது ரன்னராக விழுப்புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வீரபாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இது மட்டுமின்றி மக்களின்  தேர்வு என்ற அடிப்படையில் நான்காவது பிடித்துள்ளார் மரக்காணம் சரண். இவர்களுக்கு மக்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

இந்த சரிகமப கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை