Meiyazhagan movie review !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் மெய்யழகன்.
மற்றும் நடிகை ஸ்ரீதிவ்யா , தேவதர்ஷினி , ஜெயபிரகாஷ் , ராஜ்கிரன் , கருணாகரன் , இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார்.
திரைப்படத்தை 2d என்டர்டைன்மென்ட் நடிகை ஜோதிகா சூர்யா தயாரித்துள்ளனர்.
இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
கதையின் ஆரம்பமே :
சோழ தேசமான தஞ்சையில் ஆரம்பம்
அண்ணன், தம்பி உறவுகளுக்கு இடையில் ஏற்படும் சொத்து பிரச்சனைகளால், தான் வாழ்ந்த வீட்டை விற்று தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு புறபட்டு செல்கிறார் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மகன் அருள்மொழிவர்மன் (அரவிந்த்சுவாமி). பல வருடங்கள் கழித்து தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்கு மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சொந்த ஊரை விட்டு பிரிந்த ஏக்கம் மனதில் இருந்தாலும், உறவுக்காரர்கள் மீது ஏற்பட்ட மணகசப்பால், விருப்பமில்லாமல் கிளம்பிச் செல்கிறார் அருள்.
கல்யாணத்திற்கு சென்று தலையை காட்டிவிட்டு இரவோடு இரவாக பஸ் பிடித்து சென்னைக்கு திரும்பி வருவதுதான் திட்டம். ஆனால் ஊரில் அவரை மிக ஆவலாக ஒருவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
எடுத்த எடுப்பிலேயே அருளுடன் சகஜமாக பேசி அத்தான்.. அத்தான்.. என அருளை சுற்றிச்சுற்றி வருகிறார் கார்த்தி . ஆனால் அருளுக்கு கார்த்தியை சுத்தமாக நினைவில் இல்லை யார் என்று தெரியவில்லை. இதை எப்படி கேட்பது என தயக்கப்பட்டு சரி ஊருக்குப்போகும் வரை தெரிந்தமாதிரியே காட்டிக்கொண்டு சமாளித்துவிட்டு கிளம்பிவிடலாம் என்று நினைக்கிறார் அருள்.
தஞ்சாவூரின் இயற்கையான பச்சை பசே என்று இருக்கும் செடிகள் , இடங்கள் , ஆறுகள் , இருள் கவிழ்ந்த சாலைகளின் வழியே ஒரு உணர்வுப்பூர்வமான பயணமாக செல்கிறது மெய்யழகன் படத்தின் கதை ?
அரவிந்த்சாமி கார்த்தியை யார் என்று கண்டுபிடித்தாரா இல்லையா எப்படி தெரிந்து கொண்டார் என்பதை மிக சுவாரசியத்துடன் காண்பித்துள்ளார் இயக்குனர்.
நடிகர் கார்த்தி மிக நன்றாக நடித்துள்ளார் மிக எதார்த்தமாக ஒரு கிராமத்தானாக ஒரு வெகுளியான நடிப்பை காண்பித்துள்ளார்.
நடிகர் அரவிந்த்சாமி மிக அழகாக உள்ளார் அன்று இருந்து இன்று வரை மற்றும் அவரது கதாபாத்திரம் இப்படத்திற்கு மிகப்பெரிய ஹைலைட் மிகப் பக்க பலமாக அமைந்துள்ளார்.
நடிகை ஸ்ரீதிவ்யா சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
ஜெயபிரகாஷ், கருணாகரன், ராஜ்கரன், தேவதர்ஷினி மற்றும் நடிகர் நடிகைகள் அனைவரும் அவர் கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்துள்ளனர்.
இசை மற்றும் பின்னணி இசை மிக நன்றாக உள்ளது.
நடிகர் கார்த்தி அரவிந்த்சாமி இடையிலான உறவை மிக அழகாக காட்சி அமைத்துள்ளார் இயக்குனர்.
இத்திரைப்படம் ஒரு உணர்வுபூர்வமான உறவுகளை கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.
ஊரை விட்டு சென்றாலும்.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று உணர்வை இப்படம் மூலம் காண்பித்துள்ளனர்.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை