சற்று முன்



HDFC பென்ஷன், AUM-ல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய முதல் தனியார்துறை ஓய்வூதிய நிதி மேனேஜர் ஆனது !



HDFC பென்ஷன், AUM-ல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய முதல் தனியார்துறை ஓய்வூதிய நிதி மேனேஜர் ஆனது 

Chennai செப்டம்பர் 18, 2024: தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS)-ன் கீழ் இயங்கி வரும் மிகப்பெரிய தனியார்துறை ஓய்வூதிய நிதி மேனேஜர்-ஆன, HDFC பென்ஷன் ஃபன்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் (HDFC பென்ஷன்), ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது அதாவது செப்டம்பர் 12, 2024 அன்றுவரை இந்நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள சொத்துக்கள் (AUM) மதிப்பு ரூ.1,00,000 கோடியை விஞ்சியுள்ளது. இந்த சாதனை வெறும் 16 மாதங்களில் AUM இரட்டிப்பானதை குறிக்கிறது, அதாவது இப்போது 21 லட்சத்திற்கும் அதிகமாகியுள்ள நிறுவனத்தின் சப்ஸ்கிரைபர் அடித்தளத்தில் குறிப்பிடத்தக்க 34.1% வளர்ச்சியின் காரணமாக மே 2023-ல் இருந்த AUM மதிப்பு ரூ.50,000 கோடியிலிருந்து இரட்டிப்பாகியுள்ளது. 

HDFC லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெடுக்கு முழுதும் சொந்தமான துணை நிறுவனமென்ற வகையில் HDFC பென்ஷன்-ன் வேகமான வளர்ச்சியானது ஓய்வூதிய துறையில் அதன் தலைமை ஆற்றலையும் தனிநபர்கள் தங்கள் நிதிசார் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள அவர்களுக்கு உதவும் நிறுவனத்தின் பொறுப்பையும் கோடிட்டு காட்டுகிறது. 


HDFC பென்ஷன் சமீபத்தில் தனது 11-வது வெற்றிகரமான செயல்பாடுகளை பூர்த்தி செய்தது மற்றும் தற்போது அது ரீடெயில் மாற்றம் கார்பரேட் துறையில் ஒட்டுமொத்த NPS AUM-ன் 43.6%-ஐ நிர்வகிக்கிறது. இதில் இத்துறையின் 36.8% சப்ஸ்கிரைபர்கள் HDFC பென்ஷனையே தங்கள் விருப்ப ஓய்வூதிய நிதி மேனேஜராக (PFM) தேர்ந்தெடுக்கின்றனர். இது நிறுவனத்தின் வலுவான சந்தை தலைமையையும் நிறுவனத்தின் மேலுள்ள முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் காட்டுகிறது. இந்த நிறுவனத்தில் 5000-க்கும் அதிகமான அர்பணிப்புமிக்க ஓய்வூதிய முகவர்கள் உள்ளனர் மற்றும் இதுதான் மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களின் ஓய்வூதிய தேவைகளை பாதுகாக்கும் 2800 நிறுவனங்களுடன் இணைந்து கைகோர்க்கும் பெருநிறுவனங்களில் மிக பெரிய NPS பாயின்ட் ஆஃப் பிரெசென்ஸ் ஆகும். 


HDFC Pension-ன் முதன்மை செயலதிகாரி, ஸ்ரீராம் ஐயர் இந்த பிரமாண்டமான சாதனையை பற்றி கருத்து கூறுகையில், “மிகப்பெரும் எண்ணிக்கையில் தனிநபர்களும் நிறுவனங்களும் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை கண்டு எங்களுக்கு பணிவு உணர்வை தருகிறது. HDFC பென்ஷன்-ல் எங்கள் சப்ஸ்கிரைபர்கள், பார்ட்னர்கள், பென்ஷன் முகவர்கள் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் ஆகிய அனைவருக்கும் மிக சிறந்த சேவையை வழங்குவதுதான் எங்கள் முக்கிய முனைப்பாக உள்ளது. ரூ.1,00,000 கோடி AUM-ஐ எட்டியிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை மற்றும் இது ஒட்டுமொத்த முயற்சிகள் மற்றும் எங்கள் மேலுள்ள எங்கள் பங்காளர்களின் நம்பிக்கை ஆகியவற்றின் பிரதிபலிப்பு. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள், ரெகுலேட்டர் – ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் (PFRDA), தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை, மற்றும் எங்கள் CRA பார்ட்னர்கள் – ப்ரோடீன் eGov டெக்னாலஜீஸ், KFin டெக்னாலஜீஸ் லிமிடெட் மற்றும் CAMS NPS ஆகிய அமைப்புகளின் ஆதரவுக்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்,” என்று விளக்கினார்.


அவர் மேலும் கூறுகையில், “இந்த தேசிய பென்ஷன் அமைப்பு (NPS) என்பது மிகவும் அற்புதமான நிதி கருவி ஏனெனில் இது தனிநபர்கள் தங்கள் பணிஓய்வு காலத்தை நெகிழ்த்தன்மையுடனும் குறைந்த செலவிலும் திட்டமிட உதவுகிறது. எங்கள் சப்ஸ்க்ரைபர்களுடன் இணைந்து வளர்ச்சி காண நாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றும் NPS ஆனது மேலதிக தனிநபர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு நம்பிக்கையுடன் தங்களை தயார்படுத்திக்கொள்ள அவர்களுக்கு தொடர்ந்து ஆற்றலை வழங்கும் என்று நம்புகிறோம்,” என்று கூறினார்.


சந்தை தலைமை: ஆகசிறந்ததற்கான அர்பணிப்பு


தொழில்நுட்ப முன்னேற்றங்கள்: HDFC பென்ஷன் தனது பாயின்ட் ஆஃப் பிரெசென்ஸ் சப்ஸ்கிரைபர்கள் மற்றும் பார்ட்னர்களுக்கு தொழில்நுட்ப ஆற்றல் மூலம் NPS அனுபவத்தை மேம்படுத்துவதில் முன்னனி வகிக்கிறது. தடையற்ற டிஜிட்டல் பயணங்களில் முதலீடு செய்தும் வாட்சப் BOT சேவை போன்ற சேவைகளை அறிமுகப்படுத்தியும் இந்நிறுவனம் செயல்முறைகளை சீராக்கி தனித்துவமிக்க வாடிக்கையாளர் சேவையை வழங்க இலக்கு கொண்டுள்ளது.

செயல்பாட்டு ஆகசிறப்பு: HDFC பென்ஷனின் வலுவான செயல்பாட்டு கட்டமைப்பு தொய்வற்ற, தடையற்ற மற்றும் திறனுறு சேவை வழங்கல்களை உறுதி செய்கிறது. இந்தியா காப்பீட்டு உச்சிமாநாடு 2024-ல் நிறுவனத்துக்கு ‘மிகசிறந்த ஓய்வூதிய வாடிக்கையாளர் சேவை வழங்குனர்’ என்ற விருது வழங்கப்பட்ட போது இந்த செயல்பாட்டு ஆகசிறப்புக்கான அர்பணிப்பு கௌரவப்படுத்தப்பட்டது. 

கூடுதலாக, HDFC பென்ஷனுக்கு மிகசிறப்பாக செயல்படும் PFM என்று மனி டுடே-ஆல் 2019 முதல் 2022 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் விருது வழங்கப்பட்டதன் மூலம் நிதி மேலாண்மை துறையில் இதன் தலைமை நிலை உறுதிப்படுத்தப்பட்டது.


கருத்துகள் இல்லை