மதுரை,இராமநாதபுரம், சிவகங்கை ,தேனி, ,திண்டுக்கல் மாவட்டத்திற்கு நகராட்சி மண்டல நிர்வாக அலுவலராக இருப்பார் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார் !
மதுரை,இராமநாதபுரம், சிவகங்கை ,தேனி, ,திண்டுக்கல் மாவட்டத்திற்கு நகராட்சி மண்டல நிர்வாக அலுவலராக இருப்பார் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார் !
இராமநாதபுரம், சிவகங்கை ,தேனி, மதுரை,திண்டுக்கல் என ஐந்து மாவட்டத்திற்கு ஒரு நகராட்சி மண்டல நிர்வாக அலுவலராக இருப்பார். தற்போது பணியில் இருப்பவர் முஜிபூர்ரகுமான். இவர் அதிமுக ஆட்சியில இராமநாதபுரம்,பரமக்குடி ஆணையாளராக வேலை பார்த்தவர் அப்பொழுது முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு பினாமியாக செயல்பட்டவர்.
தீபாவளி நேரங்களில் ஆணையாளர், பொறியாளர், மற்றும் அலுவலர்கள் என மூன்று பிரிவுகளாக பிரித்து தலா ஒரு பவுன் தங்க காசு வசூலித்து கொண்டு கோயபத்தூரில் கொடுக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கபட்டது.
தற்பொழுது முஜிபூர் ரகுமான் தனக்கு வேண்டிய பொறியாளர்களை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தவர்களை நகராட்சி பொறியாளர்களாக நியமிக்க வைத்து மாதம் மாதம் ஒரு பொறியாளருக்கு ஒரு லட்சம், ஆணையாளருக்கு ஒரு லட்சம் அலுவலக பணியாளர்களுக்கு ஒரு லட்சம் என்று வசூல் வேட்டை நடத்துகிறார்.
குறிப்பாக தேவகோட்டை நகராட்சியில் பொறியாளராக இருக்கும் மீரா அலி என்பவர் அதிமுக ஆட்சியில் தேவகோட்டையில் பொறியாளராக வேலை பார்த்தவர் இவர் தன் சமூகத்தை சேர்ந்தவர் என்பதை பயன்படுத்தி வசூல் வேட்டைய ஆரம்பித்து இருக்கிறார்.
இப்பொழுது இவரது டார்க்கெட் ஒரு ஆணையாளர் பொறியாளர்கள் ஐந்து மாவட்டத்தில் இருந்தும். தலைக்கு இவருக்கு ஒரு பவுன் தங்க காசு தீபாவளிக்கு கொடுக்க வேண்டுமாம்.
திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் பினாமிகளை வைத்து கொள்ளையடித்து வருகிறார் இவர்களை யார் தட்டிக் கேட்பது ஒன்றும் புரியவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது இருந்த பாசம் இன்று வரை மாறவில்லை அவர் கூறுகின்ற வேலையை மட்டும் சரியாக செய்து வரும் இவர் தற்போது நடைபெறுகின்ற ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கூறுவதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது எதனால் என்றும் புரியவில்லை ? இவர்களை துறையின் அமைச்சர் ஏன் இங்கு பணியில் விட்டு வைத்துள்ளார் என்று புரியவில்லை உடனடியாக அமைச்சர் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
கருத்துகள் இல்லை