கோட் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் இளைய தளபதி விஜய் அவரது நடிப்பில் கோட் .
மற்றும் நடிகர் பிரசாந்த் , பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்திரி ,லைலா சினேகா, பார்வதி நாயர், மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை ஆரம்பமே :
காந்தி(விஜய்) தனது மூன்று நண்பர்களுடன் (பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் அமீர்) சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படையின் (SATS) உறுப்பினர்கள். தாய்லாந்தின் பட்டாயாவில் ஒரு பணியின் போது, காந்தியின் மகன் ஜீவன் (விஜய்) கடத்தப்படுகிறார். கார் விபத்தில் ஜீவன் மற்றும் கடத்தல்காரர்கள் இறந்துவிட்டதாக பட்டாயாவில் உள்ள உள்ளூர் போலீசார் உறுதிப்படுத்துகின்றனர். ஜீவனின் மரணம் காந்தியின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது? ஜீவன் உண்மையில் இறந்தாரா? மீதமுள்ள கதையை உருவாக்குகிறது.
இறுதியில் இணைந்தார்களா இல்லையா என்பதே கதை
நடிகர் விஜய் நடிப்பு சிறப்பு அவரது கதாபாத்திரம் மிக அழகாக உள்ளது தந்தைக்கும் மகனுக்கும் பாசப்போராக இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார் இளைய தளபதி விஜய்.
சினேகா ஒரு தாயாக வாழ்ந்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிக அழகாக உள்ளது.
நடிகை மீனாட்சி சவுத்ரி பெரிதும் எதிர்பார்த்து கதாபாத்திரம் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
நடிகர் பிரேம்ஜி வைபவ் அரவிந்த் மற்ற கதாபாத்திரங்கள் அவர் ஒரு கொடுத்த வேலை மிகக் கச்சிதமாக செய்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகனை திரையில் கண்டுள்ளோம்.
மைக் மோகன் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் காணலாம் மிக நன்றாக நடித்துள்ளார்.
நடிகை பார்வதி நாயர் பெரிதும் எதிர்பார்த்த கதாபாத்திரம் பெரிதாக இப்படத்தில் அவர்கள் தோன்றவில்லை சிறிது ஏமாற்றம்தான் அவரது கதாபாத்திரம்.
நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு மிக அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மிக நன்றாக உள்ளது.
பிரபுதேவா அவரது கதாபாத்திரம் சிறப்பு.
யுவன் சங்கர் ராஜாவின் இசை பிஜிஎம் வேற லெவல் என்று கூறலாம்.
திரிஷாவின் குத்து பாடல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து.
சிவகார்த்திகேயனின் சிறப்பு தோற்றம் அனைவருக்கும் மிகப்பெரிய விருந்து.
இயக்குனர் வெங்கட் பிரபு மிக அழகாக அற்புதமாக இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் இளைய தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை