சட்டம் என் கையில் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகரான சதீஷ் நடிப்பில் சட்டம் என் கையில்
கதை ஆரம்பமே :
"சட்டம் என் கையில்" படத்தின் கதை, ஒரு நாள் இரவில் ஏற்காடு மலை பகுதியில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டது. சதீஷ் என்ற டாக்ஸி டிரைவர், ஒரு பைக்கை எதிர்பாராத விதமாக இடித்து, அந்த நபர் உயிரிழக்கிறார். சதீஷ் பயந்து, விபத்தில் இறந்தவனின் உடலை தனது காரின் டிக்கியில் வைத்து மறைக்க முயல்கிறார். அதே சமயம், பாஷா என்ற ஒரு போலீஸின் அடாவடித்தனத்திற்கும் சிக்கி விடுகிறார்.
இரவில் நடந்த இன்னொரு கொலையை விசாரிக்கும் விநாயகம் என்ற காவல் அதிகாரியும் கதைத் திருப்பத்தில் முக்கிய பங்காற்றுகிறார். அவருக்கும் பாஷாவுக்கும் இடையில், அடுத்த இன்ஸ்பெக்டர் பதவிக்கான போட்டியும் உள்ளது. கதை சுவாரஸ்யமாக நகரும் விதத்தில், இந்த விபத்தில் இறந்த நபர் யார்? கொலை செய்யப்பட்ட பெண் யார்? சதீஷ் எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வருகிறார்? என்பது படத்தின் கதை ?
நடிகர் சதீஷ் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
மற்ற நடிகர் நடிகைகள் அனைவரும் அவர் கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்துள்ளனர்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
ஆக மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு திரைப்படம் விருந்தாக அமைந்துள்ளது.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை