சற்று முன்



திருவான்மியூர் போக்குவரத்து காவலர் மீது வாகன ஓட்டிகள் குற்றசாட்டு!

திருவான்மியூர் போக்குவரத்து காவலர் மீது வாகன ஓட்டிகள் குற்றசாட்டு! 




CHENNAI: 

திருவான்மியூர் சிக்னலில்  சபரி என்கிற போக்குவரத்து காவலர் R.I ஜாகிர் உசேன் அவர்களின் ரசீது இயந்திரத்தை தினமும் வாங்கி, உடன் S.I யாரும் இல்லாமல் இவரே தனியாக நின்று வாகன ஓட்டிகளை மிரட்டி ரசீது கொடுத்து பணம் வாங்கி வருகிறார் என குற்றசாட்டு எழுந்துள்ளது. பணம் இல்லையென்றால் இவரின் நண்பர் எண்ணை கொடுத்து அதில் பணம் அனுப்ப சொல்லுகிறார் என வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர். 




சபரி மீது அப்பகுதி வாகன  ஓட்டிகள் புகார் கொடுக்க தொடங்கியுள்ளனர். இவர் இதற்கு முன்பு சாஸ்திரி நகர் பகுதியிலும் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஞாயிற்று கிழமைகளில் கருப்பு கண் கண்ணாடி அணிந்து வெளி பகுதியில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி அவர்களை மிரட்டி பணம் வாங்கி வருவதாக அப்பகுதி வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் சபரியின் முழு விபரம் வெளியே வரும் என்கின்றனர் வாகன ஓட்டிகள். சபரி மீது துறை நடவடிக்கை பாயுமா?!

 


கருத்துகள் இல்லை