சற்று முன்



கடைசி உலகப் போர் திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளர் நடிகர் பாடகர் பல முகங்கள் கொண்ட ஹிப் ஹாப் ஆதி தயாரித்து இயக்கி நடித்துள்ளார். கடைசி உலகப் போர் 

மற்றும் ஆத்மிகா , நட்டி நடராஜ் , தலைவாசல் விஜய் , நாசர், மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

கதை ஆரம்பமே : 

இந்த படத்தினுடைய கதை 2028 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. தமிழக முதலமைச்சர் உடைய மச்சான் தான் நட்டி. இவர் தான் பினாமி, மற்ற எல்லாமுமே ஆவார். இவர் தான் தமிழக ஆட்சியையே உருவாக்கினார் என்பது போல தன்னை நினைத்து கொள்கிறார். பின் உலகமே தற்போது இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என்று இரண்டாக பிரித்திருக்கிறார்கள். இதில் இந்தியா நடுநிலையாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ரிபப்ளிக் நாடுகள் இந்தியாவை தாக்க நினைக்கிறார்கள். இதனால் மொத்த சென்னையும் அழிகின்றது. அதற்கு பிறகு என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை ?

இந்த படம் முழுக்க நடராஜ் தான் சுமந்து சென்றிருக்கிறார் என்றே சொல்லலாம். ஆதி தன்னை ஹீரோ என்பதை போல் காண்பிக்காமல் நட்டியை தான் காண்பித்து இருக்கிறார். மேலும், நட்ராஜ் தான் கதையை சொல்லி படத்தை ஆரம்பிக்கிறார்.

ஆதி நடிப்பு நன்றாக உள்ளது. மிக எதார்த்தமாக உணவு பூர்வமாக கதாபாத்திரம். 

நட்டி நடராஜ் படத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளார்

இவரது கதாபாத்திரம் தான் மிகப்பெரிய ஹைலைட். 

நாசர் அவர் கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்துள்ளார். 

ஆத்மிகா க்கு ஆதிக்கும் இடையே காட்சிகள் காதல் காட்சி அனைத்தும் சிறப்பு.

படத்தில் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்துள்ளனர். 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை