சற்று முன்



விருந்து திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவரது நடிப்பில் விருந்து 

மற்றும் நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

நாயகி நிக்கி கல்ராணியின் அப்பா மற்றும் அம்மா அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால், நிக்கி கல்ராணிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க, அந்த பாதுகாப்பையும் மீறி அவரை கொலை செய்ய  மர்ம கும்பல் முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணி தப்பித்தாலும், அந்த கும்பல் தொடர்ந்து அவரை துரத்த, அடர்ந்த வனப்பகுதியில் அந்த கும்பலிடம் நிக்கி கல்ராணி சிக்கிக் கொள்கிறார். அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணியை காப்பாற்றும் அர்ஜுன், வனப்பகுதியில் உள்ள தனது வீட்டில் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஆனால் நிக்கி கல்ராணி அர்ஜுனையே கொலை செய்ய முயற்சிக்க, அதன் பிறகு என்ன நடந்தது? அர்ஜுனை அவர் கொலை செய்ய முயற்சிப்பது ஏன்? நிக்கி கல்ராணியை சுற்றி நடக்கும் மர்ம பின்னணிக்கு காரணம் யார்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை படு சுவாரஸ்யமாகவும், பரபரப்பான திருப்பங்களோடும் சொல்வது தான் ‘விருந்து’.

ஆக்சன் கிங் அர்ஜுன் மிக அற்புதமான நடித்துள்ளார் அவருக்கு  பாடல்கள் எதுவும் இல்லை என்றாலும் அவரது பழைய பானையில் ஆக்ஷனில் கலக்கியுள்ளார். 

நிக்கி கல்ராணி மிக அழகாக உள்ளார் அவரது கதாபாத்திரம் சிறப்பு மிக நன்றாக நடித்துள்ளார். 

மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக சிறப்பாக நடித்துள்ளனர். 

ஒழிப்பதிவு மிகச் சிறப்பு. 

ஆக மொத்தத்தில் ஆக்சன் திரில்லர் பார்க்கும் ரசிகர்களுக்கு திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. 

அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை