சற்று முன்



வீராயி மக்கள் திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி குணச்சித்திர நடிகர்கள் வேலராமமூர்த்தி , மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் வீராயி மக்கள். மற்றும் தீபா ஷங்கர் , சுரேஷ் நந்தா , நந்தனா,  ராமா, செந்தில்குமாரி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை இயக்குனர் நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ளார்.

கதையின் ஆரம்பமே :

அண்ணன் வேல ராமமூர்த்தியும், தம்பி மாரிமுத்துவும் ஒரே தெருவில் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருப்பதோடு,  பகை வளர்த்துக் கொண்டும் வாழ்கிறார்கள். இவர்களைப் போல் இவர்களது பிள்ளைகளும் பகை உணர்வோடு இருக்க, இந்த நிலையை மாற்ற வேல ராமமூர்த்தியின் இளைய மகன் நாயகன் சுரேஷ் நந்தா முயற்சிக்கிறார். அவரது முயற்சியினால் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்தார்களா?, அவர்கள் பிரிந்தது ஏன்? என்பதே இப்படத்தின் கதை ‘வீராயி மக்கள்’.

நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் நந்தா, கதையின் நாயகனாக காட்சிகளுக்கு எது தேவையோ அதை அளவாக வெளிப்படுத்தி கவர்கிறார். படத்தை அவரே தயாரித்திருந்தாலும், எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்தாமல் இயல்பாக நடித்திருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அத்தை மகளை பார்த்ததும் அவர் மீது காதல் கொண்டு காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்பவர், அண்ணனை காப்பாற்றுவதற்காக அடிதடியில் இறங்கி ஆக்‌ஷனிலும் கலக்கியுள்ளார். 

வேலராமமூர்த்தி அவரது கதாபாத்திரம் இப்படத்தில் மிக நன்றாக உள்ளது. 

மறைந்த நடிகர் மாரிமுத்து நன்றாக நடித்துள்ளார்.

தீபா சங்கர் அண்ணன் தங்கை பாச போர் தான் அவரது கதாபாத்திரம் குடும்பத்துடன் சேர வேண்டும் என்று அவரது கதாபாத்திரம் அனைவரையும் கவரும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தங்கை  அண்ணன்களோட உறவை பாசத்தை காண்பித்துள்ளார் 

இப்படத்தின் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிக நன்றாக நடித்துள்ளனர் கதைக்கு ஏற்ப கச்சிதமாக பொருந்தி உள்ளனர். 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை