வாழை திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உண்மை சம்பவமான எடுக்கப்பட்ட திரைப்படம் வாழை.
நடிகர் கலையரசன், நிகிலா விமல் , திவ்யா துரைசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதையின் ஆரம்பமே :
1997, 1998 நடக்கும் கதைக்களம் என்பதால் அந்த காலகட்டத்தை கண் முன்னே நிறுத்தியதற்காகவே மாரி செல்வராஜை பாராட்ட வேண்டும். படத்தின் தொடக்க காட்சியிலே தென் மாவட்டத்தை கண்முன்னே காட்டிவிடுகின்றனர். ஆறு, வயல் என்று நெல் விளையும் பூமி என்று காட்டாமல் கண்மாய், கண்மாயில் வளர்ந்து நிற்கும் எருக்கஞ்செடி, அந்த மண்பாதைகள் என படம் நம்மை கிராமத்திற்கு கொண்டு செல்கிறது.
கலையரசன் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் காதல் காட்சிகள் அனைத்தும் சிறப்பு.
நிகிலா விமல் மிக அழகாக உள்ளார் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பு.
சிவானந்தனும் நிகீலா விமலும் வரும் காட்சிகள் அனைவரது மனதையும் கவரும் நாம் சிறுவயதில் நம் ஆசிரியர் மீது வைத்த காதலையும் பாசத்தையும் நம் நினைவுக்கு வரும் நினைவூட்டும்.
அந்த உணர்வை மிக அழகாக காண்பித்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
திவ்யா துரைசாமி மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் சிறப்பு அக்கா தம்பி பாசமாக இருக்கட்டும் காதல் காட்சிகள் கலையரசனுக்கும் திவ்யா துரைசாமிக்கும் இடையே வரும் காட்சிகள் அனைத்தும் மிக அழகாக உள்ளது.
படத்தை பெரும்பாலும் தாங்கிப்பிடிப்பதே சிவனைந்தமும், சிவனைந்தத்தின் நண்பராக வரும் சேகர் என்ற சிறுவனுமே ஆகும். இவர்கள் இருவர் செய்யும் சேட்டைகளும் நம்மை வயிறு குலுங்கி சிரிக்க வைக்கிறது. குறிப்பாக, அந்த கமல்ஹாசன் காமெடி கைதட்டல்களை தியேட்டரில் அள்ளுகிறது. முதல் பாதி பெரும்பாலும் பள்ளி காட்சிகளிலே நகர்கிறது. அந்த காட்சிகள் சற்று பிசிறினாலும் தவறான புரிதலை, சொல்ல வந்ததை சொல்ல முடியாத காட்சிகளாக மாற்றிவிடும். இன்றைய தலைமுறையில் நடப்பது போல அந்த காட்சிகள் நடைபெறுவது போல எடுப்பதும் மிகவும் கடினமான ஒன்றாகவும் இருந்திருக்கும்.
படத்தின் முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியே படத்தின் பெரும் பலமாக அமைகிறது. பள்ளி ஆண்டு விழாவிற்கு நடனம் ஆட ஒத்திகை பார்க்கச் செல்லும் சிவனைந்தம் எதிர்கொள்ளும் சிக்கலும், அதேசமயம் அங்கே ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அளவுக்கு நிகழும் மற்றொரு சம்பவமும் நம் மனதை ரணமாக்குகிறது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சி யாருமே எதிர்பாராதது. பலரையும் கண்ணீரில் நனையவைக்கிறது.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை எடுக்கப்பட்ட திரைப்படம் மற்றும் ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை