சற்று முன்



போகுமிடம் வெகுதூரமில்லை திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில்  முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விமல் அவரது நடிப்பில் போகுமிடம் வெகுதூரமில்லை.

மற்றும் கருணாஸ், பவன், ஆடுகளம் நரேன் , தீபா பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

திரைப்படத்தை இயக்குனர் மைக்கில் கே ராஜா இயக்கியுள்ளார். 


கதை ஆரம்பமே : 

நடிகர் விமல் பிண  ஊர்த்தி வாகன ஓட்டுனராக இருக்கிறார். 

ஒரு ஊர் பெரியவரை கொண்டு செல்லும் பொறுப்பை விமல் இடம் கொடுக்கின்றனர். 

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு விமல் வண்டியில் பயணிக்கிறார். 

போகும் வழியில் நடிகர் கருணாஸ் உதவி கேட்கிறார் போகும் வழியில் இறங்கி கொள்கிறேன் என்று அவருக்கு உதவுகிறார் விமல். 

கருணாசீன் நல்ல குணத்தினால் கருணாசின் எதார்த்தத்தினால் மிகப்பெரிய விளைவுகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறார் விமல் பிரச்சனையில் இருந்து தப்பித்தாரா இல்லையா அந்த பிணத்தை ஊர் பெரியவரை நல்லபடியாக கொன்று சென்று அடைந்தாரா என்பத இப்படத்தின் கதை. 

இந்த ஊர் பெரியவர் ஆடுகளம் நரேன் க்கு தந்தையாகவும் பவன் இரண்டாவது மனைவியின் மகனாகவும் இப்படத்தில் தோன்றியுள்ளனர் இவர்கள் இருவருக்கும் இடையே யார் தந்தையை கொள்ளி வைத்தனர் என்பதும் இப்படத்தில் மிக சுவாரசியமாக இயக்குனர் காண்பித்துள்ளார். 

நடிகர் விமல் மிக எதார்த்தமாக நடித்துள்ளார் அமைதியாகவும் சாதுவாகவும் தனது உணர்வு போதுமான நடிப்பை காண்பித்துள்ளார். 

கருணாஸ் இப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளார் அவரது காட்சிகள் அனைவரையும் கவரும் கிளைமாக்ஸ்சில் அவர் செய்யும்  காட்சி அனைவரது மனதையும் 

 கண்கலங்க வைக்கும். 

கருணாஸ் ஒரு கலைஞனாகவே வாழ்ந்துள்ளார். 

ஆடுகளம் நரேன் மிக எதார்த்தமாக நடித்துள்ளார் தந்தை மீது இருக்கும் பாசத்தை உணர்வுபூர்வமாக காண்பித்துள்ளார். 

பவன் சிறுவயதில் பட்ட அவமானத்தையும் கேவலத்தையும் தீர்க்கும் வன்மத்துடன் தனது கௌரவத்திற்காக தனது தந்தையை தான் கொல்லி வைக்க வேண்டும் என்று போராடும் குணத்துடன் இருக்கிறார் அவரது கதாபாத்திரம் சிறப்பு. 

தீபா பாஸ்கர் மிக நன்றாக நடித்துள்ளார். 

இத்திரைப்படம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு  படமாக அமைந்துள்ளது இரண்டு மனைவிகள் கட்டுவோருக்கு இத்திரைப்படம் சமர்ப்பணம் பிள்ளைகள் எப்படி அடித்துக் கொள்வார்கள் உரிமைக்காக என்பதுதான் உண்மை இதை மிக அழகாக இயக்குனர் காண்பித்துள்ளார். 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை