சற்று முன்



போட் திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகர் ஆன யோகி பாபு நடிப்பில் போட் . 

மற்றும் கௌரி கிஷன், எம் எஸ் பாஸ்கர், சாம்ஸ், சின்னி ஜெயந்த் , மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை இயக்குனர் சிம்பு தேவன் இயக்கியுள்ளார். 

கதையின் தொடக்கமே

ஒருபுறம் இரண்டாம் உலகப்போர், மறுபுறம் சுதந்திர போராட்டம் நடக்கும் 1943ம் ஆண்டே கதைக்களம் ஆகும். ஹிட்லரின் ஆதரவு நாடாக இருந்த ஜப்பான் குண்டு மழை பொழிந்து மற்றவர்களை அச்சுறுத்தி வந்த சூழலில், சென்னையில் கடற்கரையோரம் உள்ள வெள்ளையர்களின் முகாமின் தீடீரென குண்டு வீசப்போகிறார்கள் என்ற தகவல் பரவுகிறது. இதையடுத்து, மக்கள் பதற்றத்தில் தப்பியோடுகின்றனர்.

அந்த முகாமில் கைதியாக உள்ள தனது தம்பியை விடுவித்து அழைத்துச் செல்லும் மீனவர் குமரனும், அவனது பாட்டியும் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்களது படகில் கடலுக்குள் தப்பிச் செல்கின்றனர். அப்போது 6 பேர் உயிரை காப்பாற்றிக் கொள்ள படகில் ஏறிக்கொள்கின்றனர். இறுதியில் இவர்கள் தப்பித்தார்களா என்ன ஆனார்கள் என்பது இப்படத்தின் கதை. 

1943 காலகட்டத்தில் நடைபெற்றாலும் அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்கள் இன்றைய காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அலசியுள்ளது. படத்தின் முதல் பாதியில் படத்தை தாங்கி நிற்பதே வசனங்கள்தான். இன்று நாம் சந்திக்கும் சிக்கல்களை பேசியிருப்பதும், இன்றும் மனிதர்களிடம் இருக்கும் சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை விலாவரியாக மிக அழகாக இயக்குனர் காண்பித்துள்ளார். 

யோகி பாபு நடிப்பு மிக நன்றாக உள்ளது. 

எம் எஸ் பாஸ்கர் அவரது கதாபாத்திரம் இப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. 

இத்திரைப்படம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது. 

ஆக மொத்தத்தில் அனைவரும் இந்த போட்டில் பயணிக்கலாம். 

அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com



கருத்துகள் இல்லை