சற்று முன்



அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான இதய சிகிச்சையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது !


அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் முன்னோடித்துவமிக்க அறுவைசிகிச்சை அல்லாத ஃபோன்டன் மருத்துவ நடைமுறை, குழந்தைகளுக்கான இதய சிகிச்சையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது !

உலகின் முதல் சாதனையாக திகழும் இந்த மருத்துவ நடைமுறை சிக்கலான இதய நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

சென்னை, 27 ஆகஸ்ட் 2024: அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனை [Apollo Children's Hospital] அறுவை சிகிச்சை இல்லாமல் மேற்கொள்ளும் ஃபோன்டன் மருத்துவ நடைமுறையை [Fontan procedure without surgical intervention] வெற்றிகரமாக செய்திருப்பதன் மூலம் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சையில் [pediatric cardiac care] ஒரு புதிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிறது. இதய நோய் துறையின் தலைவர் டாக்டர் நெவில்லே ஏஜி சாலமன் [Dr. Neville AG Solomon, Head of the Cardiac Department] மற்றும் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவின் தலைவர் டாக்டர் சி.எஸ். முத்துகுமரன் [Dr. CS Muthukumaran, Head of Interventional Cardiology] தலைமையிலான மருத்துவ குழு இந்த சாதனையை படைத்திருக்கிறது. இந்த மருத்துவ நடைமுறை, குழந்தைகளுக்கு இருக்கும் சிக்கலான இதய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

6,500-க்கும் மேற்பட்ட திறந்த இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் 10,133 குறைந்தபட்ச ஊடுருவும் மருத்துவ நடைமுறைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் சாதனையுடன், அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனை குழந்தைகளுக்கான இதய பராமரிப்பில் முன்னணி வகிக்கிறது. அப்போலோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவைச் [Interventional Cardiology Division] சேர்ந்த, டாக்டர். முத்துக்குமரனின் வழிகாட்டுதலின் கீழ், 1.2 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு டக்டல் ஸ்டென்டிங் [ductal stenting] மற்றும் வெறும் 4 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு விஎஸ்டி டிவைஸ் க்ளோஸ்சர் [VSD device closures] போன்ற மேம்பட்ட நடைமுறைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய மையமாக அப்போலோ மருத்துவமனை மாறியுள்ளது.

அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நெவில்லே ஏஜி சாலமன் [Dr. Neville AG Solomon, Paediatric Cardiac Surgeon, Apollo Children's Hospital] கூறுகையில், "அப்போலோ  குழந்தைகள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இதய பராமரிப்பு தொடர்பான முழுமையான அணுகுமுறையில், அறுவை சிகிச்சை மற்றும் குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சை நிபுணத்துவத்தை இணைத்து சிக்கலான இதய நிலைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு உகந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவைசிகிச்சை அல்லாத ஃபோன்டன் மருத்துவ நடைமுறையானது [non-surgical Fontan procedure] புதுமையான, நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்பு மற்றும் புதுமையான சிகிச்சையை வழங்கவேண்டுமென நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.

அப்போலோ குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தைகள் இருதயநோய் நிபுணர் டாக்டர். சி.எஸ்.முத்துக்குமரன் [Dr. CS Muthukumaran, Paediatric Cardiologist, Apollo Children's Hospital] கூறுகையில், "சிங்கிள் வென்ட்ரிக்கிள் இதய குறைபாடுகள் [single-ventricle heart defects] உள்ள குழந்தைகளுக்கு, இந்த நவீன ஃபோன்டன் மருத்துவ நடைமுறை உயிர் காக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. மேலும் நோயாளிகள் இப்போது 2-3 நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள், இதனால் அவர்கள் குணமடையும் காலம் வெகுவாக குறைந்திருக்கிறது.  இந்த நடைமுறையின் வெற்றி எங்கள் மருத்துவர்கள் குழுவின்  மகத்தான அர்ப்பணிப்பு மற்றும் துல்லியமான திட்டமிடலுக்கு மிகப்பெரும் சான்றகும். இதுவரையில் 12 அறுவைசிகிச்சை அல்லாத ஃபோன்டான் மருத்துவ நடைமுறைகளை 100% வெற்றிகரமாக முடித்துள்ளோம், மேலும் சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்பானது 2 ஆண்டுகள் தொடரும் நீண்ட காலம் தொடர்ந்து கண்காணிப்படுகிறது’’ என்றார்.

சென்னை அப்போலோ  குழந்தைகள் நல மருத்துவமனை தனது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவமிக்க மருத்துவ நிபுணர்கள் குழு என இரண்டும் இணைந்த மிகச் சரியான அணுகுமுறையின்   மூலம் மூலம் குழந்தைகளுக்கான இதய பராமரிப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.  அறுவைசிகிச்சை அல்லாத ஃபோன்டன் மருத்துவ நடைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்துவது, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கான இதய பராமரிப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பிடுவதாக அமைந்திருக்கிறது.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை