சாலா திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் அறிமுக நாயகனாக தீரன் நடிப்பில் சாலா.
மற்றும் ரேஷ்மா வெங்கட், அருள்தாஸ், சார்லஸ் வினோத் , ஸ்ரீநாத் , சம்பத் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்குனர் மணிப்பால் இயக்கியுள்ளார்.
கதையின் ஆரம்பமே :
பார்வதி பாருக்காக
அருள்தாஸ் மற்றும் சார்லஸ் வினோத் இறுவருக்கிடையே
மதுபான கடையை யாருக்கு உரிமை உண்டு என்பது போல் இரண்டு ரவுடிகளுக்கு இடையே சண்டை நடக்கிறது அந்த மதுபான கடை கோர்ட்டால் சீல் வைக்கப்படுகிறது.
அந்த மதுபான கடை இறுதியில் யார் கைப்பற்றினார் என்பது ஒரு புறம் கதை.
நடிகர் தீரன் சிறுவயதிலிருந்தே அருள் தாஸ் இன் வளர்ப்பில் வளர்கிறான் அவரது பிள்ளையாக தம்பியாக ஒரு விசுவாசியாக இருக்கிறான் அவருக்கு ஒன்று என்றால் உயிரை கொடுக்கும் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
தீரனின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது அவரது சண்டை காட்சிகள் சிறப்பு. தீரன் மற்றும் ரேஷ்மாவுக்கும் இடையே காதல் காட்சிகள் மிக அழகாக இயக்குனர் காண்பித்துள்ளார்.
தீரன் ஒரு மனிதாபி மிக்க ஒரு கலைஞனாக உனர் பூர்வமான நடிப்பை இப்படத்தில் காண்பித்துள்ளார்.
ரேஷ்மா வெங்கட்டின் கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது.
மதுபான கடைகளை மூட சொல்லி போராடும் போராளியாக நடித்துள்ளார்.
பள்ளிக்கு அருகில் கோவிலுக்கு அருகில் இருக்கும் கடைகள் எல்லாம் மூட வேண்டும் என்றும் ஒரு சமூக ஆர்வலராக இப்படத்தில் தோன்றியுள்ளார்.
மதுவுக்கு எதிரான ரேஷ்மா கூறும் வசனங்கள் சாட்டையடி தான்.
இது அவருக்கு முதல் படம் என்றாலும் மிக நன்றாக நடித்துள்ளார் அழகாக உள்ளார் .
ஒரு குடும்ப பாங்கான பெண்ணாக இருக்கிறார் தமிழ் சினிமாவுக்கு ஒரு அழகிய கதாநாயகி கிடைத்துவிட்டார்.
இப்படத்தில் வரும் பள்ளி சிறுவர்களாக நடித்திருக்கிற அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர் குழந்தைகளுக்கும் ரேஷ்மாக்கும் இடையே வரும் காட்சிகள் எல்லாம் அனைவரது மனதையும் கவரும்.
அருள்தாஸ் நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் சிறப்பு வழக்கம்போல் அவரது பாணியில் மிரட்டியுள்ளார்.
நடிகர் சார்லஸ் வினோத் அவரது கதாபாத்திரம் சிறப்பு வழக்கம்போல் அவரது பாணியில் மிரட்டியுள்ளார்.
நடிகர் ஸ்ரீநாத் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் தோன்றுகிறார் கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
சம்பத் ராம் வில்லனாக நடித்தாலும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் அவர் வில்லத்தனத்தை காண்பித்துள்ளார்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
இத்திரைப்படம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது மதுவால் என்ன விளைவுகள் நடக்கிறது அதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் இப்படத்தின் மூலம் இயக்குனர் காண்பித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு திரைப்படம்.
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை