சற்று முன்



தங்கலான் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சீயான் விக்ரம் அவரது நடிப்பில்  தங்கலான் 

மற்றும் நடிகை பார்வதி , மாளவிகா மோகன், பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ளார். 

 கதையின் ஆரம்பமே :

கோலார் தங்க வயல்களில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஆங்கிலேயர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இந்த தங்கத்தை எடுக்க வட ஆற்காடு பகுதியில் வேப்பூர் கிராமத்தில் வசிக்கும் மக்களின் உதவியை நாடுகிறார்கள்

வேப்பூரில் கிராம மக்கள் தங்களுக்கென இருக்கும் சொந்த நிலத்தில் பயிற் செய்து வருகிறார்கள். இது பிடிக்காத ஜமீன்தார் அவர்களின் பயிர்களுக்கு தீ வைக்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு அம்மக்கள் கட்ட வேண்டிய வரியை தான் கட்டிவிடுவதாகவும் பதிலுக்கு கிராம மக்கள் அனைவரும் தங்கள் நிலத்தை கொடுத்து அதில் பண்ணைக்கு வேலையாட்களாக வர வேண்டும் என்று கூறுகிறார். 

ஜமீன்தார்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற ஆங்கிலேயர்களுக்கு தங்கத்தை கண்டுபிடிக்க முடிவு செய்கிறான் தங்கலான். தங்கலான் தங்கத்தை கண்டுபிடித்தானா? தங்கம் அவன் மக்களுக்கு அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையைப் பெற்று தந்ததா? என்பதே கதை.

சீயான் விக்ரம் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பு அவரது உடல் உழைப்பு உடல் பாகம் அனைத்தும் அனைவரையும் மெழுசிழிக்க வைக்கும் .

பூ பார்வதி மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது. 

மாளவிகா மோகன் உன் கதாபாத்திரம் அற்புதம் ஒரு வில்லி தனமான கதாபாத்திரமாக அமைந்துள்ளது.

பசுபதி கதாபாத்திரம் நன்றாக உள்ளது. 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது பிஜிஎம் வேற லெவல் என்று கூறலாம். 

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை