சற்று முன்



ரகு தாத்தா விமர்சனம் !


 தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகி ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ் அவரது நடிப்பில் ரகு தாத்தா. 

மற்றும் எம்.எஸ் பாஸ்கர் , ரவிந்திர விஜய் , ஆனந்த் சாமி , கருண பிரசாத் , தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர் .

கதையின் ஆரம்பமே :

1970 களில் தமிழ்நாட்டில் உள்ள கிராமம் வள்ளுவம்பேட்டை என்கிற ஒரு கிராமம். இந்த கிராமத்தின் மிகவும் துணிச்சலான பெண்ணாக அறியப்படுபவர் கயல்விழி பாண்டியன். கயல்விழியின் தாத்தா ( எம்.எஸ்.பாஸ்கர்) ஒரு பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுவதால் தனது பேத்தி கயல்விழியையும் முற்போக்கான சிந்தனையுடன் வளர்க்கிறார்.

வங்கியில் வேலை பார்க்கும் கயல்விழி இந்தி படித்தால்தான் ப்ரோமோஷன் கிடைக்கும் என்றால் அப்படியான ப்ரோமோஷனே வேண்டாம் என்று மறுத்துவிடுகிறார். க.பாண்டி என்கிற பெயரில் சிறுகதைகள் எழுதி வருபவர். தனது கிராமத்தில் இருந்த இந்தி மொழி சபாவை போராட்டம் செய்து விரட்டுகிறார். 


கயல்விழி எழுதும் கதையை தொடர்ச்சியாக படித்து அவரை பாராட்டியும் பெண்ணியம் பற்றிய அவரது கருத்துக்களையும் ஆதரிப்பவராக இருக்கிறார் செல்வம். செல்வம் கயல்விழி மேல் காதல் கொண்டிருக்கிறார். கயல்விழியின் தாத்தாவிற்கு திடீரென்று புற்றுநோய் இருப்பது தெரியவர தனது கடைசி ஆசையாக தனது பேத்தியின் கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். கல்யாணமே வேண்டாம் என்று கொள்கையோடு இருக்கும் கயல்விழி தனது தாத்தாவிற்காக இந்த  கல்யாணத்திற்கு சம்மதிக்கிறார். அடையாளம் தெரியாதவர்களை கல்யாணம் செய்துகொள்வதை விட தனக்கு நன்றாக தெரிந்த செல்வத்தை திருமணம் செய்துகொள்வது மேல் என்று அவர் எடுத்த முடிவு விபரீதமாக முடிகிறது.

ஒரு பக்கம் விருப்பமில்லாத கல்யாணம், இன்னொரு பக்கம் கொள்கை என இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொள்ளும் கயல்விழி என்ன சொல்யூஷன் கண்டுபிடிக்கிறார் என்பதே ரகு தாத்தா படத்தின் கதை ?

நடிகை கீர்த்தி சுரேஷ் மிக நன்றாக நடித்துள்ளார் .

கீர்த்தி சுரேஷ்  பார்க்கும்போது தோற்றத்தில் சாவித்திரி போலவே தோன்றுகிறார்.

தேவதர்ஷினி மிக நன்றாக நடித்துள்ளார் கதாபாத்திரம் இப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. 

எம் எஸ் பாஸ்கர் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய சிறப்பு. 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. 

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக நன்றாக நடித்துள்ளனர். 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை