சற்று முன்



இந்தியாவிற்கெனவே தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு வாஷிங் மெஷின்-ஐ சாம்சங் அதன் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது !

இந்தியாவிற்கெனவே தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு வாஷிங் மெஷின்-ஐ இம்மாதத்தில் அறிமுகம் செய்யும் சாம்சங் அதன் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது ! 

பெரிய, செயற்கை நுண்ணறிவு திறனோடு இயங்கும் சலவை எந்திரங்களின் (வாஷிங் மெஷின்கள்) புதிய யுகத்தை அறிமுகம் செய்யவிருக்கும் சாம்சங். லாண்டிரி அனுபவத்தின் எதிர்காலம் குறித்த ஒரு முன்னோட்ட காட்சியை வழங்கியிருக்கிறது.

Chennai – ஆகஸ்ட் 12, 2024: இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டாக திகழும் சாம்சங், இந்திய சந்தைக்கெனவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிற செயற்கை நுண்ணறிவுடன்  இயங்குகிற வாஷிங் மெஷின்கள் குறித்த  முன்னோட்டத்தை இன்று வெளியிட்டிருக்கிறது. விரைவில் நிகழவிருக்கும் இந்த புதிய வாஷிங் மெஷின்களின் அறிமுகத்தின் மூலம் இந்திய நுகர்வோர்களின் லாண்டிரி அனுபவத்தை புரட்சிகரமாக மாற்ற சாம்சங் தயார் நிலையிலிருக்கிறது.

இந்த புதிய, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட வாஷிங் மெஷின், நுகர்வோர்களின் தினசரி செயல்பாடுகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை மிக நேர்த்தியாக இணைக்கிறது. துணிகளின் சலவையை அதிக எளிதானதாகவும் மற்றும் அதிக திறன் மிக்கதாகவும் ஆக்குவதன் மூலம் சலவை செய்யப்படும் வழிமுறையிலேயே அதிரடி மாற்றத்தை இது உருவாக்குவது நிச்சயம். சிரமமான  பணிகளை குறைவாக செய்வதற்கும் மற்றும் அதிக நேரம் வாழ்க்கையை அனுபவித்திருக்கும் நுகர்வோர்களை திறன் பெற்றவர்களாக ஆக்க வேண்டும் மற்றும் சௌகரியம் என்பதன் பொருள் வரையறையை மாற்றியமைக்க வேண்டுமென்ற சாம்சங்-ன் தொலைநோக்கு திட்டத்தை ஒட்டியதாக இப்புதிய அறிமுகம் இருக்கிறது. 


1974-ம் ஆண்டில் இதன் முதல் வாஷிங் மெஷின் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்தே சலவை எந்திர புத்தாக்கத்தை தீவிரமாக முன்னெடுக்கும் சிறப்பான பாரம்பரியத்தை சாம்சங் கொண்டிருக்கிறது. 1979-ம் ஆண்டில் இதன் முதல் தானியக்க வாஷிங் மெஷின்-ஐ இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. ஒற்றை தொடுதல் வழியாக சலவைப் பணி மற்றும் சுழற்சி பணி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் லாண்டிரி செயல்பாட்டை மிக எளிதானதாக இது மாற்றியது. துணிகளுக்கான சேதத்தை குறைக்கிற மற்றும் அதிக வெப்பநிலையில் வாஷிங் செயல்பாட்டை ஏதுவாக்குகிற ஃபிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின்- ஐ1997-ம் ஆண்டில் சாம்சங் அறிமுகம் செய்தது. இதன் மூலம் துணிகளின் சிறப்பான சலவை மற்றும் பராமரிப்பிற்கு ஒரு புதிய தரநிலையை இந்நிறுவனம் நிறுவியது. 


2008-ம் ஆண்டில் சக்தி வாய்ந்த தூய்மைப்படுத்தலை உறுதி செய்ய பபிள் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் வாஷிங் மெஷின் என்ற புகழ்பெற்றிருக்கும் எக்கோபபிள் வாஷிங் மெஷின் அறிமுகத்தின் மூலம் துணிகளின் தூய்மைப்படுத்தல் முறையில் சாம்சங் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வந்தது. இப்புத்தாக்கத்தை தொடர்ந்து 2014-ம் ஆண்டில் ஆக்டிவ் டூயல்வாஷ் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தனித்துவமான அசைவாட்ட தொழில்நுட்பம் மற்றும் பில்ட்-இன்-சிங்க் ஆகியவற்றின் மூலம் நுகர்வோர்களுக்கான வசதி பெரிதும் மேம்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு இருந்ததைவிட துணிகளின் ப்ரீ-ட்ரீட்மெண்ட் மிக எளிதானதாக மாற்றப்பட்டது. 


புத்தாக்கங்களை அறிமுகம் செய்யும் இதன் மரபை தொடரும் வகையில் 2017-ம் ஆண்டில் ஃப்ளெக்ஸ்வாஷ்™ வாஷிங் மெஷின்-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியது. மாறுபட்ட பல்வேறு லாண்டிரி தேவைகளை பூர்த்தி செய்வதற்கென வடிவமைக்கப்பட்ட டூயல்வாஷர்களுடன் இதற்கு முன்பு இருந்திராத நெகிழ்வுத்திறனை இது வழங்கியது. 2021-ம் ஆண்டின்போது இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) திறன் கொண்ட எக்கோபபிள் வாஷிங் மெஷின் அறிமுகத்தின் மூலம் சிறப்பான லாண்டிரி தீர்வுகளில் ஒரு புதிய தரஅளவுகோலை சாம்சங் நிறுவியது. இந்திய குடும்பங்களுக்கு கிடைத்துவரும் லாண்டிரி அனுபவத்தை மறுவரையறை செய்ய மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. 


புதுமை அம்சங்களையும், புத்தாக்கங்களையும் அறிமுகம் செய்வதிலும் மற்றும் நுகர்வோர் அனுபவத்தில் ஒரு மாற்றத்தை செய்யும் தனது பயணத்திலும் சாம்சங் எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த மாத இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிற அதன் சமீபத்திய புதிய வாஷிங் மெஷின்கள் மூலம் சலவை செயல்தளத்தின் புதிய யுகத்தை தொடங்க சாம்சங் தயாராக இருக்கிறது.


கருத்துகள் இல்லை