சற்று முன்



அந்தகன் திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகன் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் அவர்களது ஐம்பதாவது படம் அந்தகன் மற்றும் சிம்ரன் , பிரியா ஆனந்த் , ஊர்வசி , வனிதா விஜயகுமார்,  கார்த்திக் , சமுத்திரக்கனி , யோகி பாபு , கே எஸ் ரவிக்குமார் , பெசன்ட் நகர் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்குனர் தியாகராஜன் இயக்கியுள்ளார். 

கதையின் ஆரம்பமே 

பியானோ இசைக் கலைஞரான பிரசாந்த் ஒரு பரிசோதனை முயற்சியாக பார்வை இல்லாதவராக நடிக்கிறார். அவரை நிஜமாகவே பார்வை இல்லாதவர் என நினைத்துக் கொள்ளும் பிரியா ஆனந்த் தனது கஃபேவில் பியானோ வாசிக்கும் வேலை வாங்கி தருகிறார். பிரசாந்த் பியானோ வாசிப்பதை பார்த்து தனது திருமண நாளில் தன் மனைவிக்காக பிரசாந்தை பியானோ வாசிக்க சொல்கிறார் நடிகர் கார்த்திக். கார்த்திக் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி சிம்ரன் தனது கள்ளகாதலனான சமுத்திரகனியுடன் இருப்பதை பார்த்து விடுகிறார். இதனால் சிம்ரன் கார்த்திக்கை கொன்றுவிடுகிறார். 

இதை பார்த்த  பிரசாந்த் கண் தெரியாதவர் போலவே அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார். ஆனால் பின் பிரசாந்திற்கு கண் தெரியும் என்கிற உண்மை தெரிய வர அவரையும் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் சிம்ரனும் அவர் கள்ளகாதலனாக வரும் சமுத்திரகனியும். இவர்களிடம் இருந்து பிரசாந்த் எப்படி தப்பிக்கிறார் என்பதே அந்தகன் படத்தின் கதை 

நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் வந்திருந்தாலும் மிக அற்புதமாக ஒரு கம்பேக் கொடுத்துள்ளார் அவரது நடிப்பு சிறப்பு. 

என்றும் அவர் டாப் ஸ்டார் தான். 

90ஸ் கிட்ஸ் இன் கனவுக்கன்னி சிம்ரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ளார். 

சிம்ரன் நடிப்பு சிறப்பு மிக அற்புதமாக நடித்துள்ளார் இப்படத்தில் அவர் ஒரு வில்லியாக கதாபாத்திரம் நடித்துள்ளார். இன்னும் அதே இளமையில் ரசிகர்களை கவருகிறார். 

வனிதா விஜயகுமார் மிக நன்றாக நடித்துள்ளார் சமுத்திரக்கனி மனைவியாக அவர் செய்யும் காட்சிகள் அனைவரையும் கவரும். 

பிரியா ஆனந்த் மிக அழகாக உள்ளார் அவரது நடிப்பு நன்றாக உள்ளது மிக யதார்த்தமான நடித்துள்ளார். 

யோகி பாபு தன கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்துள்ளார். 

ஊர்வசி சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் அனைவரையும் கவரும். 

கே எஸ் ரவிக்குமார் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய ஹைலைட். 

சமுத்திரகனி மிக நன்றாக நடித்துள்ளார் ஒரு காவல்துறை அதிகாரியாக மற்றும் சிறப்பாக இக்கதையில் தோன்றியுள்ளார். 

நடிகர் கார்த்திக் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில்  பார்க்கிறோம் சிறிது நேரம் வந்தாலும் நம் மனதை கவருவார். 

படத்தில் அனைத்து கதாபாத்திரமே அவர்களது பங்கை மிக நன்றாக செய்துள்ளனர். 

இயக்குநர் தியாகராஜன் செய்திருப்பதும் அதுதான். தொடக்கத்தில் வரும் முயல்காட்சி முதல் கடைசியில் கோக் கேனை தட்டிவிடும் காட்சிவரை எந்த மாற்றமும் இல்லாமல் அந்தகன் எடுக்கப்பட்டிருப்பதால் இந்தியில் படம் பார்க்காதவர்களுக்கு சுவாரஸ்யமான ஒரு அனுபவமாக இருக்கும். 

இயக்குனர் தியாகராஜன் மிக நன்றாக இயக்கியுள்ளார்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை