சற்று முன்



நானும் ஒரு அழகி திரை விமர்சனம் !



தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர் நடிகைகள் நடிப்பில் கதையின் நாயகியாக மேக்னா நடிப்பில் நானும் ஒரு அழகி. மற்றும்  அருண், ராஜதுரை, சிவசக்தி , சுப்புராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்குனர் பொழிக்கரையான் .க இயக்கியுள்ளார்.

கதையின் நாயகி மேக்னாவுக்கு தனது அத்தை மகன் நாயகன் அருண் மீது காதல் மலர்கிறது. அருணுக்கும் மேக்னா மீது காதல் இருந்தாலும், படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதால் காதலை சொல்ல தயங்குகிறார்.  இந்த சமயத்தில் அருணுக்கு வேலை கிடைக்க கூடிய சூழல் அமைய, அதற்காக அவர் சென்னை கிளம்புகிறார். மகளின் காதல் பற்றி அறியாத மேக்னாவின் அம்மா அவருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார். தனது மாமன் மனதில் என்ன இருக்கிறது,  என்று தெரிந்துக்கொள்ளாமல் தன் மனதில் இருக்கும் காதலை குடும்பத்தாரிடம் சொல்வது சரியாக இருக்காது, என்று நினைக்கும் மேக்னா, அருணுக்காக காத்திருக்க, அவர் வராததால் தனது அம்மா பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துக் கொள்கிறார். ஊரில் இருந்து வரும் அருண், விசயம் அறிந்து கலங்குகிறார்.

மேக்னாவின் திருமண வாழ்க்கை ஆனந்தமாக தொடங்கினாலும், ஐந்து வருடங்களுக்குப் பிறகு அலங்கோலமாகி விடுகிறது. திருமணமான பல பெண்கள் எதிர்கொள்ளும் சாதாரண விசயமாக இருந்தாலும், இதற்கு அவர்கள் மட்டுமே காரணம், என்ற முத்திரை குத்தும் ஆண் வர்க்கமும், அவரது உறவினர்கள், சமூகம் ஆகியவற்றால் குற்றவாளியாக்கப்படும் பெண்களின் நிலை மேக்னாவுக்கும் ஏற்படுகிறது. அழுது புலம்புவது, கணவரால் தாக்கப்பட்டு விரட்டியப்பது என்று வழக்கமான பெண் போல் தனது தாய் வீட்டுக்கு திரும்பி வரும் மேக்னாவுக்கு, தன் மீது சுமத்தப்பட்ட பழியில் இருந்து மீள்வதற்கான வாய்ப்பு அமைகிறது. 

இத்தகைய செயல் சமூகத்தின் பார்வையில் தவறாக தெரிந்தாலும், அதே சமூகம் தன் மீது சுமத்தப்பட்ட பழியில் இருந்து விடுபடுவதற்கு இதை தவிர வேறு வழி இல்லை, என்ற முடிவுக்கு வரும் மேக்னா, ”இதோ நான் தகுதியானவள் என்று நிரூபித்துவிட்டேன், இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற கேள்வியை கேட்கிறார். அவரது கேள்விக்கு இந்த சமூகம் அளித்த பதில் என்ன?, மேக்னா எதிர்கொண்ட பிரச்சனை என்ன? என்பதை,  சொல்வது தான் இத்திரைப்படத்தின் கதை  

’நானும் ஒரு அழகி.

மேக்னா மிக நன்றாக நடித்துள்ளார் ஒரு கிராமத்து பெண்ணாக ஆரம்பம் முதல் இறுதி வரை மிக அழகாக உள்ளார் அவரது கதாபாத்திரம் படத்தில் மிகச்சிறப்பு.

அருண் நன்றாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் சிறப்பு.

சிவசக்தி ஒரு தாயாக வாழ்ந்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது.

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

இத்திரைப்படம் சமூகத்திற்கு ஒரு  விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை