டீன்ஸ் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் நடிப்பில் டீன்ஸ்
கதை ஆரம்பமே
13 சிறுவர்கள் ஒரு காலணியில் வசிக்கிறார்கள் இவர்களில் ஒரு சிறுமி தனது பாட்டி ஊரில் ஒரு கிணற்றில் பேய் உள்ளதாக சொல்கிறாள்.
இதை கேட்டவுடன் எல்லா சிறுவர்களுக்கும் அங்கு போய் இருக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும் என்று ஆசை வருகிறது.
இவர்கள் ஞாயிறு அன்று திட்டம் போட்டு திங்கட்கிழமை போக வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
திங்கட்கிழமை 13 பேரும் பள்ளியை கட்டடித்துவிட்டு அந்த சிறுமி சொன்ன ஊருக்கு செல்கின்றனர்.
அங்கு செல்லும் வழிகளில் அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன இவர்களுடன் வரும் சிறுவர் சிறுமிகள் காணாமல் போகின்றனர்.
இவர்கள் காணாமல் போனதற்கு என்ன காரணம் என்பதையும் மற்றும் பார்த்திபன் என்னவாக வருகிறார் என்பதை இப்படத்தின் மீதி கதை.
யோகி பாபு சிறிது நேரம் வந்தாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளார்.
பார்த்திபன் தனது பாணியில் மிக அசத்தலான நடிப்பை காண்பித்துள்ளார்.
படத்தின் 13 சிறுவர்கள் சிறுமி அவர்களது நடிப்பு அனைத்தும் சிறப்பு.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3/ 5
கருத்துகள் இல்லை