சற்று முன்



ககனச்சாரி திரை விமர்சனம் !

தென்னிந்திய சினிமா உலகில் தற்பொழுது மலையாள திரை உலகில்  படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன அந்த வரிசையில் ஒரு புதிய படம்‌ ககனச்சாரி !

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அருண் சந்து இயக்கத்தில், கோகுல் சுரேஷ், அனார்கலி மரிக்கார், அஜு வர்க்கீசு மற்றும் KB கணேஷ்குமார் நடிப்பில், டிஸ்டோபியன் சயின்ஸ் பிக்சன் ஜானரில், ஜுலை 5 வெளியாகயுள்ள மலையாளத் திரைப்படம் "ககனச்சாரி".

 தொடக்கமே 2050-ம் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. மழை வெள்ளத்தில் நிலப்பரப்புகள் மூழ்குவதோடு, ஏலியன்களின் படையெடுப்பு, அரசின் அடக்குமுறை, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை பயன்படுத்தும் கட்டாயம், உள்ளிட்டவைகளால் அச்சத்தோடு வாழும் மக்களை, கண்காணிக்க ஒவ்வொரு வீட்டிலும் அரசின் கருவி ஒன்று பொருத்தப்பட, அதை காவல்துறையும் கண்காணிக்கிறது. இப்படி ஒரு காலக்கட்டத்தில், ஏலியனை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார் எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை  பாதுகாப்பாக ஒரு கட்டிடத்தில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு உதவியாளர்களாக கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்க்கீஸ் இருக்கிறார்கள். 

ராணுவ வீரர் கணேஷ் குமார் பற்றி வாழ்க்கைவரலாற்று படம் எடுப்பதற்காக சேனல் ஒன்று அவரை சந்திக்கிறது. அப்போது தனது வாழ்க்கைப் பற்றியும், தான் எதிர்கொண்ட ஏலியன் சம்பவங்கள் பற்றியும் கணேஷ் குமாரும், அவரது உதவியாளர்களும் சேர்ந்து விவரிக்கிறார்கள்.  எடுப்பதற்கான அவர்களின் உரையாடல்களையும், அதைச் சார்ந்த காட்சிகளும் ஆவணப்பட கோணத்தில் திரையில் காண்பித்துள்ளனர்.

கடினமான சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் ஏலியன் இணைகிறது. 250 வயதாகும் அந்த ஏலியன் மீது, இதுவரை எந்த பெண்ணும் தன்னை திரும்பி கூட பார்க்கவில்லை என்று கவலைப்படும், 25 வயதாகும் கோகுல் சுரேஷுக்கு காதல் மலர்கிறது. அந்த காதல் காமெடியாக பயணித்தாலும், மறுபக்கம் செயற்கை நுண்ணறிவின் நன்மை மற்றும் தீமை,  கால சூழ்நிலை மாற்றத்தால் நாட்டில் அடிக்கடி ஏற்படும் மழை வெள்ள பாதிப்பு, பெட்ரோல் தட்டுப்பாடு, ஏலியன் உலகத்திற்கும் மனித இனத்திற்கும் உள்ள தொடர்பு என பல்வேறு விசயங்கள் பற்றி பேசும் இத்திரைப்படம். இயக்குநர் இறுதியில், ஏலியன் பெண்ணுடனான காதல் என்ன ஆனது?, பூமியில் நடக்கும் ஏலியன் தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையை, அந்த குறும்படத்தில் இருந்து வெளிவந்து திரைப்பட பாணியில் சொல்வது தான் ‘ககனாச்சாரி’.

அஜு வர்க்கீசு மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது அனைவரையும் கலகலப்பாக சிரிக்க வைத்து விட்டார்.

கோகுல் சுரேஷ் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பு.

ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் கணேஷ் குமார் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

ஏலியனாக வரும் கதாபாத்திரம் பெரிதாக பேசவில்லை என்றாலும் அவரது உணர்வையும் அவர் மனதில் தோன்றும் அனைத்தையும் மிக அழகாக ஒரு மிஷின் மூலம் கூறியுள்ளனர் எனினும் மனிதனுக்கும் ஒரு ஏலியனுக்கும் காதலை ஒரு உணர்வை மிக அழகாக காண்பித்துள்ளார் இயக்குனர்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க கூடிய திரைப்படம்.

Rating 3.5 / 5 

Marveltamilnews.com



கருத்துகள் இல்லை