டிஸ்னி+ ஹாட்ஸ்டார், 'சட்னி - சாம்பார்' சீரிஸ், முன் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், 'சட்னி - சாம்பார்' சீரிஸ், முன் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ், 'சட்னி - சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்
வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அஸ்வின் பேசியதாவது...
வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், நாங்கள் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. பெரிய நட்சத்திரங்களை வைத்துத் தயாரித்துள்ளோம், ஹாட்ஸ்டார்க்கு எங்களது நன்றி. இயக்குநர் ராதா மோகன் மிக அற்புதமாக இயக்கியுள்ளார். இரண்டு எபிஸோட் பார்த்திருப்பீர்கள், உங்களுக்குப் பிடித்திருக்குமென நம்புகிறோம். மற்ற 4 எபிசோடுகள் உட்பட 6 எபிஸோடுகளும் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. முமுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள், அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா பேசியதாவது...
இயக்குநர் ராதா மோகனின் படைப்பில், நானும் இருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை தான். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எனது நன்றி. இந்த படைப்பில் உழைத்த அனைவருக்கும் எனது நன்றி, இந்த சீரிஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
இசையமைப்பாளர் அஜீஸ் அசோக் பேசியதாவது...
இது எனக்கு மூனாவது வெப்சீரிஸ், ஹாட்ஸ்டாரில் இரண்டாவது வெப் சீரிஸ். என்னோட ஃபேவரைட் இயக்குநர் ராதா மோகன் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. யோகி பாபு சார், வாணி போஜன், கயல் சந்திரன் என எல்லோருமே மிக அருமையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். உங்கள் எல்லோரையும் இந்த சீரிஸ் கவரும் என நம்புகிறேன் நன்றி.
நடிகர் இளங்கோ குமரவேல் பேசியதாவது...
இயக்குநர் ராதா மோகன் திரைக்கு வந்து 20 வருடங்கள் கடந்திருக்கிறது. அவரது முதல் படத்திலும் நான் இருந்தேன், அவரது முதல் சீரிஸிலும் இருக்கிறேன், மகிழ்ச்சி. ஆர்ட் டைரக்டர் கதிர், ரைட்டர் பொன் பார்த்திபன் என, நண்பர்கள் அனைவரும் அவரோடு இத்தனை வருடம் இணைந்து, பயணித்து வருகிறோம். அன்று எப்படி எனர்ஜியோடு இயங்கினாரோ, அதே எனர்ஜியோடு இன்றும் இயங்குகிறார். நடிக்கும் போது பொறுப்பை நம்மிடம் கொடுத்துவிட்டு, வேடிக்கை மட்டுமே பார்ப்பார். நமக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நடிக்க வைப்பார். அவரது சிறப்பு அம்சம் அது, அவருடன் வேலை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீரிஸை உருவாக்க மிகுந்த ஒத்துழைப்பு தந்த, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், ஹாட்ஸ்டாருக்கும் எனது நன்றி. இந்த சீரிஸுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் நிதின் சத்யா பேசியதாவது...
வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் அவர்களுக்கு என் முதல் நன்றி, பலருக்கு வாழ்க்கை தந்திருக்கும் பிரதீப் அவர்களுக்கு நன்றி. நான் வாய்ப்பு கேட்டு ராதா மோகன் சாரிடம் சென்றேன், ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கிறது செய்கிறாயா? என்று கேட்டார், அதே கதாபாத்திரத்தைக் கொஞ்சம் டெவலப் செய்து, மிகப் பெரிய பாத்திரம் ஆக்கி, என்னை இதில் நடிக்க வைத்திருக்கிறார். சார் மிகப்பெரிய நன்றி சார். என்னுடன் நடித்த இளங்கோ குமரவேல் சார், வாணி போஜன், யோகி பாபு, சந்திரன் என எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். பிரசன்னா மிக அருமையாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார், இசையில் அஜீஸ் அசத்தி இருக்கிறார். பொன் பார்த்திபன் மிக அருமையான வசனங்கள் தந்திருக்கிறார். உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
நடிகர் கயல் சந்திரன் பேசியதாவது...
வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் அவர்களுக்கு என் நன்றிகள், இத்தனை பிரம்மாண்டமான சீரிஸ் உருவானதற்கு அவர்கள் தான் காரணம், இதற்கு ஒத்துழைத்த ஹாட்ஸ்டாருக்கு எனது நன்றிகள். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு சீரிஸில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு எனது நன்றிகள். ராதா மோகன் சார் ஐ லவ் யூ சார், என்னை ஒரு நடிகனாக பயன்படுத்தியதற்கு நன்றி. என்னுடன் நடித்த அத்தனை பேரும் மிக அற்புதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள், உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
நடிகை சம்யுக்தா பேசியதாவது...
இம்மாதிரி மேடையில் மிகப் பெரும் ஆளுமைகளுடன் இருப்பது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெப் சீரிஸில், அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். நான் ராதா மோகன் சாரின் ரசிகை, அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. இவ்வளவு விரைவில் அது நடைபெறும் என நினைக்கவில்லை, இந்த சீரிஸில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்த சீரிஸில் பணிபுரிந்தது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சீரிஸ் உங்கள் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தும் நன்றி.
நடிகை நந்தினி பேசியதாவது...
ஹாட்ஸ்டாருக்கு என்னுடைய நன்றி, ஹாட்ஸ்டாரில் நான் செய்யும் இரண்டாவது சீரிஸ் இது. ராதா மோகன் சார் எனக்கு ஒரு மிகச் சிறந்த கதாபாத்திரம் தந்திருக்கிறார். இங்குள்ள அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள், எல்லோரும் இனிமையாகப் பழகினார்கள். எல்லோருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு இந்த சீரிஸ் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
நடிகை மீரா கிருஷ்ணன் பேசியதாவது...
வேல்ஸ் நிறுவனத்திற்கும் ஹாட்ஸ்டாருக்கும் என் முதல் நன்றி. இது நான் நடிக்கும் முதல் வெப்சீரிஸ். இந்த கதாபாத்திரத்தைத் தந்த இயக்குநர் ராதா மோகன் சாருக்கு நன்றி. கிட்டத்தட்ட அவரை நாங்கள் லவ் பண்ணவே ஆரம்பித்து விட்டோம், அவர் எப்படி வேலை வாங்குகிறார் என்றே தெரியாது, நடிகர்களை இயல்பாக வைத்து, மிக அற்புதமாக வேலை வாங்கி விடுவார். ஜாலியாக ஒரு ஃபேமிலியில் இருப்பது போலவே தான் இருந்தது. இங்குள்ள அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் என் நன்றி.
நடிகை வாணி போஜன் பேசியதாவது…
ராதா மோகன் சாருடன் நான் இரண்டாவது முறையாக வேலை பார்க்கிறேன், சட்னி சாம்பார் சீரிஸ் மிக அற்புதமாக வந்துள்ளது. ராதா மோகன் சார் ஐ லவ் யூ. என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் எனது அன்புகள். இந்த சீரிஸ் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், அனைவருக்கும் என் நன்றிகள்.
ஹாட்ஸ்டார் சார்பில் பிரதீப் மில்ராய் பேசியதாவது...
ஹாட்ஸ்டாரில் பதினைந்துக்கும் மேற்பட்ட சீரிஸ் தயாரித்து வருகிறோம், நிறைகுடம் எப்பொழுதும் தளும்பாது என்பது, ராதா மோகன் சாருடன் வேலை பார்க்கும் போது தான் தெரியவந்தது. ஊட்டியில் படப்பிடிப்பாகட்டும், டிஸ்கசனாகட்டும், பல ஸ்டார்களை ஒன்றிணைத்து சூட்டிங் ஆக இருக்கட்டும், எந்த ஒரு சலனமும் இல்லாமல் மிகச் சிறப்பாகப் படப்பிடிப்பை நடத்துவார். அவருக்குள் இத்தனை காமெடி இருக்கிறது என்றே தெரியாது, மிக மிக இயல்பாக இருப்பார். யோகிபாபு மிக நன்றாக நடித்திருக்கிறார், அவருக்கு இது முதல் வெப் சீரிஸ், ராதா மோகன் சாருக்கும் இது முதல் வெப் சீரிஸ், மிக அற்புதமாக வந்துள்ளது. அத்தனை நடிகர்களும் மிக அற்புதமான உழைப்பைத் தந்திருக்கிறார்கள். பிரசன்னா மிக பிஸியான ஒளிப்பதிவாளர், ஆனால் இந்த சீரிஸில் பணியாற்றித் தந்ததற்கு நன்றி. அஜீஸ் நல்ல இசையைத் தந்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இந்த சீரிஸை உருவாக்கித் தந்த வேல்ஸ் நிறுவனத்திற்கு என்னுடைய நன்றிகள். உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி.
கலை இயக்குநர் கதிர் பேசியதாவது...
இயக்குநர் ராதா மோகனுடன் பணியாற்றுவது மிக மகிழ்ச்சியானதாக இருக்கும், அவருடன் பணியாற்றும் போது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். நான் இயக்குநர் ஹரி உடன் அடிதடி, சண்டை, ரத்தம், போன்ற காட்சிகள் என பணிபுரிந்து கொண்டிருப்பேன், ஆனால் இவருடன் வந்து பணியாற்றும் போது மனது இலகுவாகிவிடும். ஆரம்பகால படங்களிலிருந்து இவருடன் பணியாற்றி வருகிறேன். திடீரென ஒரு நாள் கூப்பிட்டு, ஒரு விமானத்தை செட் போட முடியுமா? என்று கேட்டார். உனக்கு என்ன பைத்தியமா? என்று கேட்டேன். ஆனால் கதையைச் சொல்லி, விமான செட் போடச் சொன்னார். அந்த விமான செட் போட்டது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இன்று வரை நான் பல படங்களில் வேலை பார்த்து இருக்கிறேன், ஆனால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. விமானத்தை உருவாக்கியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த சீரிஸில் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக இருந்தது. இதில் உழைத்த அனைத்து கலைஞர்களும், தங்கள் முழு உழைப்பைத் தந்திருக்கிறார்கள். ராதா மோகன் முத்திரை காமெடிகள் இந்த சீரிஸில் இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி.
எழுத்தாளர் பொன் பார்த்திபன் பேசியதாவது....
உப்புக் கருவாடு படத்தில் என்னை எழுத்தாளர் ஆக்கி அழகு பார்த்தார் ராதா மோகன் சார், இப்போது இந்த படைப்பின் மூலம் சீரிஸிற்கும் என்னைக் கூட்டி வந்துள்ளார், நன்றி சார். இந்த சீரிஸ் திரையிட்டபோது, நீங்கள் எங்கெல்லாம் சிரிக்கிறீர்கள் எனப் பதட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம், நீங்கள் சிரிக்க ஆரம்பித்தவுடன் தான் எங்களுக்குப் பயம் விலகியது. இந்த சீரிஸ் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த வேல்ஸ் நிறுவனத்திற்கும், ஹாட்ஸ்டாருக்கும் எனது நன்றிகள். எங்களுக்கு இன்னும் நிறைய ஆதரவு தந்தால், உங்களுக்கு இன்னும் நிறையப் படைப்புகளைத் தருவோம். கலை இயக்குநர் கதிர் அவர் பணிபுரியும் படங்களுக்கு, என்னையும் கூட்டிச் சென்று விடுவார். ரத்தம், வெட்டு என பணிபுரிந்து விட்டு வரும்போது ராதா மோகன் சார் கூப்பிட்டு மனதை இலகுவாக்கிவிடுவார். அவர் உன்னால் முடியும் என்று நம்பி பொறுப்பைத் தந்துவிடுவார். இந்த சீரிஸில் அனைத்து கலைஞர்களின் கெமிஸ்ட்ரியும் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் ராதா மோகன் பேசியதாவது...
திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறேன் என்கிறார்கள், 20 ஆண்டுகளைக் கடந்து இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். சட்னி சாம்பார் சீரிஸ் பற்றி எல்லோரும் சொல்லி விட்டார்கள். இந்த சீரிஸில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முதல் சீரிஸ், எங்களுக்காக அவர் மிக பிஸியான நேரத்தில் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தார், எல்லோரும் உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட் தந்தாரா? என ஆச்சரியப்பட்டார்கள். அவர் தந்த ஒத்துழைப்பிற்கு நன்றிகள். இந்த நேரத்தில் ஓடிடிக்கு என்னை அணுகிய செந்தில், கிருஷ்ணன் குட்டி, பிரதீப், ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நடிகர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள், எல்லோரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார்கள். அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். என்னுடைய உதவி இயக்குநர் குழுவிற்கு, என்றும் நான் நன்றி சொன்னதே இல்லை, அவர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸ் என்னுடைய மற்ற படைப்புகள் போல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி' என்றார்.
இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது. யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
'சட்னி-சாம்பார்' சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜீஸ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன், இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், 'சட்னி - சாம்பார்' சீரிஸ் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் துவங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை