சற்று முன்



7/G திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியான சோனியா அகர்வால்  நடித்திருக்கும் படம் 7ஜி . மற்றும் ரோஷன் பஷீர் , ஸ்முருதி வெங்கட் சுப்பிரமணிய சிவா, விபின், செல்வா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஹாரூன்.

ரோஷன் பஷீர் - ஸ்முருதி வெங்கட் தம்பதி தனது மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். தனது நீண்டநாள் சொந்த வீடு கனவு நினைவானதால் ஸ்முருதி வெங்கட் மகிழ்ச்சியாக இருக்கிறார். மறுபக்கம், ரோஷன் பஷீரின் அலுவலக தோழி சினேகா குப்தா அவரை அடைவதற்காக மாயமந்திர முயற்சிகளில் ஈடுபடுவதோடு, அவரது வீட்டில் சூனியம் செய்யப்பட்ட பொம்மையை வைக்கிறார். இதற்கிடையே, ரோஷன் பஷீர் வேலை விசயமாக வெளியூர் செல்ல, தனியாக இருக்கும் ஸ்முருதி வெங்கட் பல்வேறு அமானுஷ்ய பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்.

அந்த வீட்டில் அடைப்பட்டு இருக்கும் ஆத்மா ஒன்று திடீரென்று வெளியாகி, ஸ்முருதி வெங்கட்டை மிரட்டுவதோடு, “இது என் வீடு, இங்கு யாரையும் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறி அவரை விரட்ட முயற்சிக்கிறது. அந்த ஆத்மா யார்?, சூனியம் செய்யப்பட்ட பொம்மைக்கும் அந்த ஆத்மாவுக்கும் என்ன தொடர்பு?, ஸ்முருதி வெங்கட் அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து  தன் வீட்டையும், பிள்ளையையும் காப்பாற்றினரா? இல்லையா? என்பதே இப்படத்தின்  மீதிக்கதை.

சோனியா அகர்வால் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் சிறிது நேரம் வந்தாலும் இப்படத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஸ்முருதி வெங்கட் மிக நன்றாக நடித்துள்ளார் மிக அழகாக உள்ளார் அவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பு.

சுப்பிரமணிய சிவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் அவர் கொடுத்த பங்களிப்பை மிக கச்சிதமாக செய்துள்ளார்.

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே நன்றாக நடித்துள்ளனர்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

திரைப்படம் ஹாரர் திரைப்படமாக அமைந்துள்ளது திகில்ட்டும் காட்சிகளும் அனைவரும் பார்க்கும் படியாக மிக நன்றாக இயக்குனர் இயக்கியுள்ளார்.

 மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய திரைப்படம் .

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை