சற்று முன்



வர்மக்கலையில் குதிரை மாதிரி ஓடுவது என்பது இந்தியன் 2 படத்தில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது !



வர்மக்கலையில் குதிரை மாதிரி ஓடுவது என்பது இந்தியன் 2 படத்தில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது - சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத் தலைவர் கண்ணன்!



வாலறிவன் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பாக

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகையில்  அமைந்துள்ள வேங்கடமங்கலம் சமுதாயக் கூடத்தில்  நடைபெற்றது.


இந்த போட்டியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளுர் போன்ற  மாவட்டத்தில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்ப்பட்ட  மாணவர்கள்  இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியானது வயது அடிப்படையின் பிரிவில்  தனித் திறமை போட்டியாக நடைபெற்றது.


இதில் அலங்கார சிலம்பம்,ஒற்றைக்கொம்பு,இரட்டை கொம்பு,ஒற்றை சுருள், இரட்டை சுருள், ஒற்றை வாள், இரட்டை வாள், ஒற்றை மான் கொம்பு, இரட்டை மான் கொம்பு, இரட்டை செடி குச்சி, வேல் கொம்பு குத்து வரிசை

போன்ற சிலம்ப கலையும் இதில் இடம் பெற்றன.


வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு

வாலறிவன் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் தலைவர்

வி.நந்தகுமார்

சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவித்தார்.


இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த

சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத் தலைவர் கண்ணன் பேசியதாவது......


மாநில அளவிலான இந்த சிலம்பாட்ட போட்டியில் தகுதி பெற்றவர்கள் தேசிய அளவில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர்.

மேலும் இந்த சிலம்பம் விளையாட்டு மாநில அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அடுத்து தேசிய அளவிலும் இந்த சிலம்பாட்டம் விளையாட்டை அங்கீகரிக்க வேண்டும் உலகம் முழுவதும் நமது தமிழர் பாரம்பரிய மூத்த கலை சிலம்பாட்டம் பரவ வேண்டும்.

தமிழக அரசு இதற்கு  முயற்சிக்க வேண்டும்  என்று எங்களது சிலம்பாட்டம் குழு சார்பாக கோரிக்கையாக வைக்கின்றோம்.

இந்தியன்  2 படத்தில்  வர்மக்கலையில் தாக்கப்பட்டவர் குதிரை மாதிரி  ஓடுவது என்பது அந்த படத்தில் மிகைப்படுத்தி எடுத்து உள்ளார்கள்.

வர்மக்கலையால் பாதிக்கப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் மூலமாகத்தான் அதை சரி செய்ய முடியும் என்பது தவறு இன்னொரு ஆசான் மூலமாகவும் அதை சரி செய்யலாம் இது படத்திற்காக எடுக்கப்பட்டது என்றார்.


கருத்துகள் இல்லை