சற்று முன்



இந்தியன் 2 திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 

மற்றும் நடிகர் சித்தார்த், விவேக், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ் ஜே சூர்யா ,சமுத்திரகனி, ஜெகன் , காளிதாஸ் ஜெயராம், தம்பி ராமையா, மனோ பாலா, மாரிமுத்து, ரேணுகா , இமான் அண்ணாச்சி , சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

படத்தின் ஆரம்பமே

சித்தார்த் மற்றும் அவருடைய நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜெகன் ஆகியோர் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்கிறார்கள். இதற்காக அவர்கள் போராடவும் செய்கிறார்கள். சித்தார்த் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்து கொண்டிருக்கிறார். இருந்தும் ஒரு கட்டத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது, இந்தியன் தாத்தா தான் வரவேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதற்காக இவர் இந்தியனை தேடும் பயணத்திலும் இறங்குகிறார்.

மேலும், ‘கம்பேக் இந்தியன்’ என்ற ஹாஷ்டேகை சோசியல் மீடியாவில் வைரலாக்கி நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை சேனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் செய்கிறார். உலகில் ஒரு மூலையில் இருக்கும் இந்தியனுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. கடைசியில் அவர் தைவானில் இருந்து மீண்டும் இந்தியா செல்ல நினைக்கிறார். இந்தியாவிற்கு 28 ஆண்டுகள் கழித்து வரும் சேனாதிபதியை கைது செய்ய வீரசேகரன் என்ற போலீஸ் காத்து கொண்டிருக்கிறார். லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று சேனாதிபதி மீண்டும் அவதாரம் எடுக்கிறார்.

இதனால் சேனாதிபதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? குற்றவாளிகளை தண்டித்தாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை.

கமல்ஹாசனின் நடிப்பு மிக அற்புதமாக உள்ளது .

சேனாதிபதி கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். வர்மக்கலையின் சண்டை காட்சிகள் அனைத்தும் மிக அற்புதமாக உள்ளது. 

சித்தார்த்தின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது தந்தைக்கும் மகனுக்கும் இடையே பாசம் அனைவரு மனதையும் கவரும் இவரது கதாபாத்திரம். 

பாபி சிம்ஹா சிபிஐ அதிகாரியாக மிகத் துணிச்சலுடன் நேர்மையான அதிகாரியாக நடித்துள்ளார். 

பிரியா பவானி சங்கர் ,  ஜெகன் மிக நன்றாக நடித்துள்ளனர். 

கொடுத்த வேலை மிக கச்சிதமாக செய்துள்ளனர். 

சமுத்திரக்கனி,  தம்பி ராமையா கதாபாத்திரம் அனைவரது மனதையும் கவரும். 

ரகுல் ப்ரீத் சிங் மிக அழகாக உள்ளார் இவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது. 

மறைந்த நடிகர் விவேக் வரும் காட்சிகள் அனைவரது மனதையும் கவரும்.

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம் திரையில் விவேக் அவர்களை பார்க்கிறோம்.

எஸ் ஜே சூர்யா சிறிது நேரம் வந்தாலும் அவரது காட்சிகள் சிறப்பு நாம் அவரை இந்தியன் 3ல் பிரம்மாண்டமாக பார்க்கலாம்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. 

தாத்தா வராரு என்ற பாடல் அனல் பறக்கும் திரையரங்குகளில். 

இத்திரைப்படம் நம் நாட்டின் தேசத்தில்  லஞ்சம் ஊழலை ஒலிக்கும் ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது.

நம் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழலையும் மற்றும் இந்தியாவில் நடக்கும் ஊழலையும் அதை இயக்குனர் சங்கர் மிகப் பிரம்மாண்டமாக அழகாக காண்பித்துள்ளார். 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் குழந்தைகளுடன் பெற்றோர்கள் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை