சற்று முன்

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் திரை விமர்சனம் ! | ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025 விழாவில் மாற்றத்தை உருவாக்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு ! | ஸ்வீட் ஹார்ட் திரை விமர்சனம் ! | ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ் ! | ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படமான 'டாக்ஸிக் : ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ! | வருணன் திரை விமர்சனம் ! | ராபர் திரை விமர்சனம் ! | டெக்ஸ்டர் திரை விமர்சனம் ! | மாடன் கொடை விழா திரை விமர்சனம் ! | ஈரோட்டில் புதிய AutoEVMart விற்பனை நிலையத்துடன் கிரீவ்ஸ் ரீடெய்ல் அதன் EV இருப்பினை வலுப்படுத்துகிறது ! | ஆண்டிகுப்பம் முதல் அமெரிக்கா" வரை என்ற முன்னாள் மாணவரின் பேச்சு சக மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது ! | ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது ! | நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம் ! | SIMS Hospitals Unveils SIMS Penmai – A Dedicated Comprehensive Women’s Care Centre ! | ஊடகத்துறையினர் அறிமுக இயக்குநர்களை ஊக்குவிக்க வேண்டும் - மர்மர் இயக்குநர் வேண்டுகோள் ! | Blue Star expands its comprehensive range of Commercial Refrigeration solutions to meet growing demands ! | ராபர் படம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா ? | பிரபல நடிகை ரேஷ்மா பசுபலேட்டி பங்குபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியை வசந்த் & கோ உடன் பஜாஜ் கொண்டாடியது ! | அவ்னி மூவிஸ் - பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது ! | How Millets Can Redefine Your Wholesome Goals in 2025 ! | AIR INDIA EXPRESS WELCOMES ITS 100TH AIRCRAFT; DOUBLES FLEET IN JUST TWO YEARS ! | எமகாதகி" திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! | ரசிகர்கள் ஆதரவோடு சத்தமின்றி சாதிக்கும் மர்மர் ! | கல்வித் துறையில் ரோபோடிக்ஸ்.. மைபோட் (MiBOT) வென்ச்சர்ஸ் புதிய புரட்சி ! | தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி !


சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு !

சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு  !

தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது.  பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) -  தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும்.‌ மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்களில் விருதுக்குரியவற்றை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை சைமா 2024 - SIIMA 2024 வெளியிட்டுள்ளது.‌ 

இது தொடர்பாக சைமா ( SIIMA) தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி பேசுகையில், '' 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான சைமா ( SIIMA) விருதுக்குரிய படைப்புகளின் பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளோம்.‌ கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்-  மொழி எல்லைகளை கடந்து, தேசிய அளவில் பிராந்திய மற்றும் புதிய தேசிய அளவிலான பிரம்மாண்டமான வெற்றியை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் வலிமையான போட்டியாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்'' என்றார். 

சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் தசரா (தெலுங்கு), ஜெயிலர் (தமிழ்), காட்டேரா (கன்னடம்), 2018 (மலையாளம்) ஆகிய படங்கள் பெரும்பாலான பிரிவுகளில் இடம் பிடித்துள்ளன. 

தெலுங்கில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'தசரா'- பதினோரு விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, முன்னணியில் உள்ளது. அதே தருணத்தில் நானி- மிருனாள் தாக்கூர் நடிப்பில் வெளியான 'ஹாய் நன்னா' திரைப்படமும் பத்து விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 

தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் பதினோரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மாமன்னன்: திரைப்படமும் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 

கன்னடத்தில் தருண் சுதிர் இயக்கத்தில் தர்ஷன் நடிப்பில் வெளியான 'காட்டேரா' எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது.  ரக்ஷித் ஷெட்டி- ருக்மணி வசந்த் நடித்த 'சப்த சாகரதாச்சே எல்லோ -சைடு ஏ 'திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 

மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் - ஆசிப் அலி நடித்த '2018' எனும் திரைப்படம் எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. இதைத்தொடர்ந்து மம்முட்டி - ஜோதிகா நடிப்பில் வெளியான 'காதல்- தி கோர் ' எனும் திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் வாக்களிப்பு முறை மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

www.siima.com மற்றும் SIIMA வின் ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு வாக்களிக்கலாம். 


கருத்துகள் இல்லை