Header Ads

சற்று முன்



ரயில் திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் புதிய முயற்சியானஇயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ரயில் இந்தப் படத்தை வேடியப்பன் தயாரித்திருக்கிறார். தேநீர் ஈஸ்வரி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமலா, ரமேஷ் வைத்யா, பர்வைஸ் மஹ்ரூ, ஷமீரா, கோச்சடை செந்தில், வைரம் பட்டி, பின்டூ, வந்தனா, பேபி தனிஷா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் தேனீ அருகே உள்ள கிராமத்தில் தான் கதை நகர்கிறது. அங்கே ஹீரோ குங்குமராஜ் வேலை, சம்பாத்தியம் இல்லாமல் தினமும் குடித்துவிட்டு எல்லோரிடமும் கடன் வாங்கி வைத்திருக்கிறார். இவருக்கு கல்யாணம் ஆகி 8 வருடங்கள் ஆகி இருக்கிறது. ஆனால், குழந்தை இல்லை. இன்னொரு பக்கம் அந்த கிராமத்தில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

அதில் வடமாநிலத்தை சேர்ந்த நிறைய பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதோடு அந்த ஊரில் உள்ள டீக்கடையில் கூட பானிபூரி விற்பவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஹீரோ குங்குமராஜ் இருக்கும் பகுதியை சுற்றி பல பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார். இது அவருக்கு பிடிக்கவே இல்லை. இன்னொரு பக்கம் அவருடைய மனைவி மற்றவர்களிடம் பேசும் போது அவருக்கு அதிகமாக வெறுப்பு, கோபம் வருகிறது.

அந்த வகையில் அவருடைய மனைவி வீட்டின் எதிரே உள்ள வடமாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவருடன் பேசுகிறார். அது சுத்தமாகவே குங்குமராஜுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் கோபத்தில் தன்னுடைய நண்பருடன் சுனிலை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக சுனில் இறந்து விடுகிறார். அவருடைய இறப்பினால் குங்குமராஜூனுடைய வாழ்க்கையே மாறுகிறது. அதற்கு பின் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரம் மிக நன்றாக நடித்துள்ளனர்.

அனைவரும் கொடுத்தவரை மிக கச்சிதமாக செய்துள்ளனர் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர்.

திரைப்படம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது திரைப்படம் உணர்த்தும்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்

Rating : 3 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை