ஹரா' திரைப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி வசூலில் அதகளம் செய்யும் மோகன் !
ஹரா' திரைப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறி வசூலில் அதகளம் செய்யும் மோகன் !
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் வெளியீட்டில் 'வெள்ளி விழா நாயகன்' மோகன் நடிப்பில் ஜூன் 7 அன்று உலகெங்கும் வெளியான 'ஹரா', திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
திரைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஹரா', அனைத்து தரப்பு ரசிகர்களை குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்த்து வருகிறது. இதன் மூலம் இன்றும் அவர் 'வெள்ளி விழா நாயகன்' தான் என்பதை மோகன் நிரூபித்துள்ளார்.
தொடக்கத்தில் தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான 'ஹரா', ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து இன்னும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டது. இது தவிர மலேசியா, ஐரோப்பா, லண்டன் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலும் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் கொடுத்துள்ள ரீ-என்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு, திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் அது கூறும் கருத்துக்காகவும் 'ஹரா' படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, தந்தை-மகள் பாசப்பிணைப்பு காட்சிகள் அவர்களை கவர்ந்துள்ளன.
இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் விநியோகஸ்தர் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் இன்று சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இவர்கள் இருவரும் கோவையை சேர்ந்தவர்கள். அன்றைய காலகட்டத்தில் கோவை தம்பி தயாரிப்பில் பல்வேறு வெற்றி படங்களில் மோகன் நடித்தது நினைவிருக்கலாம். தற்போது 'ஹரா' வெற்றியின் மூலம் கோயம்புத்தூருக்கும் மோகனுக்கும் உள்ள பந்தம் தொடர்கிறது. 'ஹரா' வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தை தயாரிப்பாளர் மோகன்ராஜ் விரைவில் அறிவிக்க உள்ளார்.
'ஹரா' திரைப்படத்தில் மோகன் ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடித்துள்ளார். உலகெங்கும் உள்ள மக்கள் பார்க்க வேண்டிய யூனிவர்சல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள 'ஹரா' திரைப்படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம்' புகழ் கௌஷிக் மற்றும் 'பவுடர்' நாயகி அனித்ரா நாயர் மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.
பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் 'ஹரா' திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
'ஹரா' திரைப்படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இசை: ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, மனோ பிரபாகரன், மோகன் குமார், விஜய் ஶ்ரீ ஜி, படத்தொகுப்பு: குணா, சண்டை பயிற்சி: விஜய் ஸ்ரீ ஜி .
கருத்துகள் இல்லை