சற்று முன்



அஞ்சாமை திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விதார்த் அவரது நடிப்பில் அஞ்சாமை.

மற்றும் நடிகை வாணி போஜன் ,  சமூக ஆர்வலர்  நடிகை ரேகா நாயர் சின்னத்திரை புகழ் ராமர்,  ரகுமான் , மாரிமுத்து , சஞ்சனா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

8ஆம் வகுப்பில் இருந்து நீட் தேர்வுக்குத் தனிப் பயிற்சி பெறும் மாணவரும் 12ஆம் வகுப்பு பாதியில் இருந்து பெயரளவுக்குப் பயிற்சி பெறும் மாணவரும் எப்படி ஒரே நுழைவுத் தேர்வை எழுதுவது சரியாக இருக்கும்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல், பதிலை நாமே யோசிக்கத் தூண்டுகிறது அஞ்சாமை! இதுவே திரைப்படத்தின் கதை 

திண்டுக்கல் கிராமமொன்றில் நாடகக் கலைஞனாக இருப்பவர் சர்க்கார். தன் மகனுக்குக் கலை சார்ந்தே ஆர்வம் கிளைத்தெழுவது கண்டு, தான் உயிராக நேசிக்கும் கலைத்தொழிலைக் கைவிடுகிறார். மகன் படிப்பே, உயர்வுக்கான ஆயுதம் என்று நம்புகிறார். மகன் அருந்தவமும் அப்பாவின் ஆசையை நிராசையாக்காமல் நன்கு படிக்கிறார். மனைவி தனியார் பள்ளியில் சேர்க்கலாம் என்று கூறியும், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில்தான் தன் மகன் படிக்க வேண்டும் என்று அங்கேயே படிப்பைத் தொடர வைக்கிறார்.

10ஆம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் பிடிக்கும் அருந்தவம், மருத்துவர் ஆக ஆசைப்படுகிறார். 11ஆம் வகுப்பில் அருந்தவத்தின் மதிப்பெண்கள் சற்றே குறைய, முக்கிய பாடங்களுக்கு ட்யூஷன் சேர்த்துவிடுகிறார். 12ஆம் வகுப்பில் நீட் கட்டாயம் என்று அறிவிப்பு வர, பயிற்சி மையத்திலும் சேர்க்கிறார். இதெற்கெல்லாம் ஆகும் கட்டணத்துக்காக நிலத்தையே அடமானம் வைப்பவர், கடைசியில் ஆசையாய் வளர்த்த மாட்டையும் விற்கிறார்.

மகன் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் சர்க்காருக்கு, அடுத்தடுத்து ஏற்படும் நிகழ்வுகள் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. மாணவர்களின் தற்கொலைகள் குறித்த செய்தி, அவருக்கு அச்சத்தை ஊட்டுகிறது. நீட் தேர்வுக்குத் தேர்வு மையம் ஜெய்ப்பூரில் அமைக்கப்பட்ட, மகளின் சங்கிலியை அடகு வைத்துப் பணம் புரட்டி, கிளம்புகிறார்கள் சர்க்காரும் அருந்தவமும். அங்கோர் அசம்பாவிதம் ஏற்பட, அதிலிருந்து மீண்டார்களா? என்பதே அஞ்சாமை படத்தின் மீதிக் கதை. இத்தகைய காட்சிகள் அந்நியமாக இல்லாமல், அண்டை வீட்டில் நடப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்திச் செல்கின்றன. அதுவும் இடைவேளைக் காட்சியில் அதிகாரியின் காலில் விழுந்து சர்ச்சார் கதறும் காட்சிகள், கல் நெஞ்சம் கொண்டோரையும் கரைத்துவிடும்.  

இந்தியத் திருநாட்டில் கல்வி முறையும் அரசு அமைப்பும் எப்படி இயங்குகிறது, இதில் மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா என்பதெல்லாம் இரண்டாம் பாதியில் ரகுமான் மூலம் பிரச்சார நெடி அதிகமில்லாமல் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. சில காட்சிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் படத்தோடு ஒன்ற வைத்துவிடுகின்றன.

நீட் தேர்வுக்காக போராடும் காட்சிகள் அனைத்தும் சிறப்பு. நமது அரசாங்கத்தை பற்றி மிகத் தெளிவாக இப்படத்தில் காண்பித்துள்ளனர். 

நீட் தேர்வுக்கு செல்லும் போது மாணவர் மாணவிகள் படும் வேதனைகள் கஷ்டங்கள் அனைத்தையும் மிகத் தெளிவாக இப்படத்தில் காண்பித்துள்ளனர்.

விதார்த்தின் மகனாக வரும் கதாபாத்திரம் மிக நன்றாக நடித்துள்ளார்.

படத்தில் வரும் மாணவர் மாணவிகள் அவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பு.

விதார்த் கதையின் நாயகனாக மட்டுமல்ல தகப்பனாக வாழ்ந்துள்ளார்.

வாணி போஜன் ஒரு  மனைவியாக பிள்ளைகளுக்கு தாயாக மிக நன்றாக நடித்துள்ளார்.


ரேகா நாயர் அற்புதமாக நடித்துள்ளார் தன் பிள்ளைக்காக ஜெய்ப்பூர் வரை செல்லும் தாயாகவும் ஒரு விழிப்புணர்வு  போராடும் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

ரகுமான் மிக நன்றாக நடித்துள்ளார் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பு. 

ரகுமான் ஒரு வக்கீலாக வாழ்ந்துள்ளார்  தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு போராடும் போராளி என்று கூறலாம்.

மறைந்த நடிகர் மாரிமுத்து சிறிது கதாபாத்திரம் நடந்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் திரைப்படம் மாணவர் மாணவிகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்களும் திரைப்படம் சமர்ப்பணம்.

மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை