தண்டுபாளையம் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகைகளான வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் மற்றும் பூஜா காந்தி நடிப்பில் தண்டுபாளையம்
கர்நாடகாவில் உள்ள கிராமத்தில் பூஜா காந்தி தலைமையில் 8 பேர்களை கொண்ட தண்டுபாளைய கும்பல் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பணம், நகைகளை கொள்ளையடிக்கும் அந்த கும்பல் அந்த பெண்ணை கற்பழித்து கழுத்தறுத்து கொலை செய்து விட்டு செல்கிறார்கள் .இவர்களை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் பூஜா காந்தி கும்பலை மடக்கி பிடிக்கும் காவல்துறை நீதிமன்றத்தின் மூலம் இவர்களுக்கு தண்டனை பெற்று தருகிறார்கள். இவர்களை வெளியே கொண்டு வருவதற்காக சுமா ரங்கநாத் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு கிராமத்தில் தனியாக இருக்கும் பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் சென்று கொலை செய்து விட்டு சென்று விடுகிறார்கள்.
இதனையடுத்து சுமா ரங்கநாத் தலைமையிலான குழுவை பிடிப்பதற்காக சிறப்பு காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் டைகர் வெங்கட் ஒரு சந்தர்ப்பத்தில் சுமா ரங்கநாத் குழுவை மடக்கி பிடிக்கிறார். இறுதியில் சுமா ரங்கநாத் குழுவை டைகர் வெங்கட் என்ன? செய்தார் என்பதே ’தண்டுபாளையம்’ படத்தின் மீதிக்கதை.
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
ஒரு கும்பலை பிடித்தாலும் எங்கள் இனம் உங்களை சும்மா விடாது என்று தொடரும் என்ற முற்றுப்புள்ளியை இயக்குனர் வைத்துள்ளார் இது போன்ற உறவுகளோடு சேர்ந்து நடக்கிறது என்பதை திரைப்படம் உணர்த்துகிறது.
டைகர் வெங்கட் மிக அற்புதமாக நடித்துள்ளார்.
சோனியா அருவால் சிறிது நேரம் வந்தாலும் அடுத்த பாகத்துக்காக அனைவரும் காத்துக் கொண்டிருப்போம்.
வனிதா விஜயகுமார் வில்லித்தனமாக நடித்துள்ளார் மிக அற்புதமாக கதாபாத்திரம்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஒரு விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை