பெண்களுக்கான டெனிம் ஆடைகள்: கேவல் கிரண் குளோத்திங் நிறுவனம் அறிமுகம் !
பெண்களுக்கான டெனிம் ஆடைகள்:
கேவல் கிரண் குளோத்திங் நிறுவனம் அறிமுகம்
'க்ராஸ்' நிறுவனத்தை கையகப்படுத்தியது
க்ராஸ் கேஷுவல்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை கேவல் கிரண் குளோத்திங் நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த பங்குகளின் மதிப்பு 166.51 கோடி ரூபாய் ஆகும். இந்த சம பங்குகள் முதன்மை உட்செலுத்துதல் மற்றும் இரண்டாம் நிலை கொள்முதல் மூலம் பெறப்படுகிறது. இந்த நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் கேவல் கிரண் குளோத்திங் நிறுவனம் தனது வர்த்தகத்தை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் விரிவுபடுத்துவதோடு பெண்களுக்கான புதிய டெனிம் ஆடைகளையும் அறிமுகம் செய்துள்ளது.
க்ராஸ் கேஷுவல்ஸ் நிறுவனம் 'க்ராஸ்' என்னும் பெயரில் பெண்களுக்கான ஜீன்ஸ் ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. முதன்மையாக இந்நிறுவனம் பெண்கள், இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேலாடைகள் மற்றும் கீழாடைகளை தயாரித்தல், விற்பனை செய்தல், வடிவமைத்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த வணிகத்தை இந்நிறுவனம் ஓரியண்டல் டிரேடிங் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
க்ராஸ் கேஷுவல்ஸ் நிறுவனத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கேவல் கிரண் குளோத்திங் நிறுவனத்திற்கான வணிக பரிமாற்றத்திற்கு ஓரியண்டல் டிரேடிங் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ரவி பஞ்சாபி, சுனில் பஞ்சாபி, சுஷில் பஞ்சாபி மற்றும் ஆத்மாராம் பஞ்சாபி ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.
'க்ராஸ்' பிராண்ட் ஆடைகள் இந்தியா முழுவதும் உள்ள 1000க்கும் மேற்பட்ட லைப்ஸ்டைல், பாண்டலூன்ஸ், ரிலையன்ஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லுலு மற்றும் இதன் 8 பிரத்யேக ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் கேவல் கிரண் ஆடைகள் 488க்கும் மேற்பட்ட பிரத்தியேக ஷோரூம்கள், 3,000க்கும் மேற்பட்ட மல்டி பிராண்ட் அவுட்லெட்டை உள்ளடக்கிய 80+ விநியோகஸ்தர்கள் மற்றும் இந்தியா முழுவதும் 2000க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து கேவல் கிரண் குளோத்திங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கேவல்சந்த் ஜெயின் கூறுகையில், எங்கள் டெனிம் மற்றும் கேஷுவல் ஆடைகள் பிரிவை விரிவுபடுத்த மற்றும் பன்முகப்படுத்துதல் தன்மைக்கு ஏற்ப இந்நிறுவனத்தை கையகப்படுத்தியது என்பது எங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது, இது நாங்கள் கையகப்படுத்திய முதல் நிறுவனம் மட்டுமல்ல, வளர்ச்சி மற்றும் புதுமைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கான சான்றாகவும் உள்ளது. க்ராஸ் நிறுவனத்தை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். இந்த பரிவர்த்தனை மூலம் வரும் ஆண்டுகளில் எங்கள் பங்குதாரர்களுக்கு சிறந்த பலன்களை வழங்க முடியும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
இது குறித்து இந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் ஹேமந்த் ஜெயின் கூறுகையில், இந்த கையகப்படுத்தல் மூலம் முழு குடும்பத்திற்கும் ஏற்ற ஆடைகளின் பிராண்டாக எங்கள் பிராண்ட் மாறி உள்ளது. எங்கள் நிறுவனம் உலக அளவில் சிறந்த நெட்வொர்க்கை கொண்டுள்ளது. க்ராஸ் கேஷுவல்ஸ் நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்த நிறுவனமாக இருப்பதால் அதனுடன் இணைந்து இருப்பதன் காரணமாக எங்கள் வளர்ச்சி மேலும் உயரும். ரவி பஞ்சாபி, பெண்கள் எந்த மாதிரியான ஆடைகளை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இது எங்கள் பிராண்ட் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று தெரிவித்தார்.
க்ராஸ் கேஷுவல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரவி பஞ்சாபி கூறுகையில், பெண்களுக்கான டெனிம் மற்றும் கேஷுவல் ஆடை சந்தையில் எங்களின் ஆடை ரகங்கள் ஏராளமான மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதில் நாங்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம். எங்கள் தயாரிப்புகளை அதிக அளவிலான இடங்களுக்கு கொண்டு செல்லவும் எங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதிலும் கேவல் கிரண் குளோத்திங் சிறந்த நிறுவனமாக இருக்கும். எங்கள் கூட்டணி ஒரு சிறந்த கூட்டணியாகும். பிராண்ட் உருவாக்கம், சந்தைப்படுத்தல் மற்றும் வினியோகம் ஆகியவற்றில் எங்களின் ஒருங்கிணைந்த நிபுணத்துவம், எங்களின் க்ராஸ் ஆடைகளின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும். கிரண் குளோத்திங் கட்டமைப்பு ஆலோசனைகள் போன்றவை மேலும் எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கிரண் குளோத்திங் நிறுவனத்தின் கையகப்படுத்தலுக்கான ஆலோசகர்களாக மராத்தான் கேபிடல் அட்வைசரி பிரைவேட் லிமிடெட், பன்சி எஸ். மேத்தா அன்ட் கோ., சார்ட்டட் அக்கவுண்டன்ஸ் மற்றும் வாடியா காண்டி அன்ட் கோ. வழக்கறிஞர்கள், ஆலோசகர்கள் மற்றும் நோட்டரிகள் ஆகியோர் இருந்தனர்.
கருத்துகள் இல்லை