சற்று முன்



கருடன் திரைவிமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகரான நடிகர் சூரி கதையின் நாயகனாக தோன்றும் கருடன்.

இப்படத்தில் நடிகர் சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஷிவதா, ரேவதி ஷர்மா, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார்.


தமிழ்நாட்டில் தென் பகுதியில்  நட்பு, அன்பு, துரோகம், நியாயம், விசுவாசம் இவற்றை மையப்படுத்திய நகரும் கோலிவுட்டின் மற்றுமொரு கதை. சிறு வயது முதல் நட்பின் இலக்கணமாக வளரும் ஆதி (சசிக்குமார்) மற்றும் கர்ணா (உன்னி முகுந்தன்) ஆகிய இருவரின் வாழ்க்கையில் வந்து சேர்கிறார் ‘சொக்கன்’ எனப்படும் நடிகர் சூரி. ஊர், பேர் தெரியாமல் அடைக்கலம் இல்லாமல் வாழ்ந்த தனக்கு, உணவளித்து தத்தெடுத்துக் கொண்ட கர்ணாவின் வலது கரம் ஆவதுடன் நாயை விட நன்றியுடையவராக, எள் என்றால் எண்ணெயாக நிற்கும் நபராக மாறி, கர்ணா  மற்றும் அவரது நண்பர் ஆதி என இருவரையும் காக்கிறார் சூரி.

தேனி மாவட்ட கிராமத்தில் லாரி பிஸ்னஸ், செங்கல் சூளை, கோயில் சொத்தை பராமரிப்பது எனக் குடும்பமாக, ஊரின் முக்கியப் புள்ளிகளாக வலம் வரும் இவர்களது வாழ்வில், சென்னையில் இருக்கும் கோயில் நிலம் ஒன்றின் பத்திரத்தால் இடையூறு வருகிறது. ஊருக்கு புதிதாக சென்று சேரும் போலீஸ் உயர் அதிகாரியான சமுத்திரக்கனி மூலம் அமைச்சரான இயக்குநர் ஆர்.வி உதயகுமார் காய் நகர்த்த இவர்களது குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் தொடங்குகிறது. இவற்றுக்கு மத்தியில் ஆதி - கர்ணா - சொக்கன் இவர்களது உறவு என்ன ஆனது என்பது இத்திரைப்படத்தின் கதை 

நடிகர் சூரி மிக நன்றாக நடித்துள்ளார் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

நட்புக்கு பெயர் போன சசிகுமாரின் நடிப்பு சிறப்பு.

உன்னி முகுந்தன் கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் சிறப்பு.

இயக்குனரும் நடிகருமான ஆர்வி உதயகுமார் மிக நன்றாக நடித்துள்ளார்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

யுவன் சங்கர் ராஜா நன்றாக பேக்ரவுண்ட் ஸ்கோர் செய்துள்ளார்.

முன்னணி நடிகை வடிவுக்கரசி கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை