தாத்தா விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான ஜனகராஜ் நடிப்பில் தாத்தா.
மற்றும் நடிகை ரேவதி, மோனிஷ், கயல் தேவராஜ், ரிஷி, தீபா பாஸ்கர், முருகன், ராயல் பிரபாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நரேஷ். இந்த படத்தை தயாரித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் கவிதா.
நடிகர் ஜனகராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தோன்றியுள்ளார். தாத்தாவாக.
ஜனகராஜ் செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அவரது பேரன் இரண்டு நாட்களுக்கு இவர் வீட்டுக்கு வருகிறான்.
பக்கத்து வீட்டு பையன் ஒரு ரிமோட் காரை வைத்துக் கொண்டிருக்கிறான் அதை பார்த்து இவரது பேரனும் அப்பா எனக்கு வாங்கி கொடுக்க மாட்டார் என்று சொல்லி பாட்டியிடம் கூறுகிறார் .
தாத்தா எனக்கு கார் வேண்டும் என்று கேட்கிறான். தாத்தா வாங்கி கொடுத்தாரா இல்லையா என்பதை கதை ?
ஜனகராஜ் நடிப்பு அற்புதம் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
தாத்தாவும் பேரனுக்கும் இடையே இருக்கும் உறவை மிக அழகாக இயக்குனர் காண்பித்துள்ளார்.
கயல் தேவராஜ், ராயல் பிரபாகர், ரிஷி தீபா பாஸ்கர் அனைத்து கதாபாத்திரங்களும் மிக நன்றாக உள்ளது.
இதைப் பார்க்கும்போது நாம் நம் தாத்தாக்களிடம் எப்படி இருந்தோம் என்பதை நினைவூட்டும் பலருக்கு.
தான் வைத்திருந்த சைக்கிளை விற்று பேரனுக்கு வாங்கி கொடுக்கிறார் ஜனகராஜ்.
பேரனோட சந்தோசம் தான் முக்கியம் அவன் முகத்தில் இருக்கும் சிரிப்பு அது போதும் என்று உணர்த்துகிறார் அதுதான் தாத்தா.
குறும்படம் அனைவரது வாழ்விலும் வந்து செல்லும் அதை நாம் உணர்வோம்.
மொத்தத்தில் அனைத்து பேரன் பேத்திமார்களுக்கு இது சமர்ப்பணம் இந்த தாத்தா.
Rating : 4 / 5
கருத்துகள் இல்லை