ஸ்டார் திரைவிமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான கவின் நடிப்பில் ஸ்டார்.மற்றும் நடிகை அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதாகைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் எலன் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், நடிப்பில் அவன் சாதிக்க கிடைத்த ஒரு முக்கியமான வாய்ப்பின்போது சந்திக்கும் விபத்து அவன் வாழ்வை எப்படி திருப்பி போடுகிறது? அந்த விபத்தில் இருந்து மீண்டு அவன் சினிமாவில் நடிகனாக , ஸ்டாராக உயர்ந்தானா ? என்பதே படத்தின் கதை.
பள்ளி, கல்லூரி மாணவனாக, இளைஞனாக, அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளராக கவின் “கலையரசன்” கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்துகிறார். மகனின் நடிப்பின் வெற்றிக்காக உறுதுணையாக இருக்கும் ஒரு தந்தையாக லாலின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. லால் ஒரு தந்தையாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
மகனுக்கு உறுதுணையாக மிக சிறப்பாக நடித்துள்ளார்.
நாயகிககளான அதிதி, ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடித்துள்ளனர். கவினின் தாயாக கீதா கைலாசத்தின் நடிப்பு நன்றாக உள்ளது.
கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
அதிதி கதாபாத்திரம் நன்றாக உள்ளது ஒரு காதலியாக நன்றாக நடித்துள்ளார்.
ப்ரீத்தி முகுந்தன் நடிப்பு சிறப்பு கலகலப்பாக எந்த ஒரு கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளும் காதலியாக மனைவியாக சிறப்பாக நடித்துள்ளார்.
நடிகர் சுகுமார் வரும் காட்சி மிகவும் அற்புதமாக காண்பித்துள்ளார் சினிமா ஒருவரை எந்தளவு உயர்த்திப் பார்க்கும். அதே அளவிற்கு கீழே தாழ்த்தியும் விடும் என்பதை மிக அழகாக காண்பித்துள்ளனர். அந்த காட்சியில் சுகுமாரின் சொந்த அனுபவத்தையே இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பதற்கு நிச்சயம் அவரை பாராட்ட வேண்டும்.
யுவன் சங்கர் ராஜா இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
பாடல்கள் நன்றாக உள்ளது.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை