சற்று முன்



குற்றப்பின்னணி திரை விமர்சனம் !

 

தமிழ் சினிமா உலகில் ராட்சசன் புகழ் சரவணன் நடிப்பில் குற்றப்பின்னணி மற்றும் தீபாவளி, தாட்சாயிணி, சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா, கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்.பி.இஸ்மாயில்.

பழனியில் வசிக்கும் நாயகன் ‘ராட்சசன்’ சரவணன், தினமும் அதிகாலையில் வீடு வீடாக சென்று பால் வியாபாரம் செய்வதோடு, தண்ணீர் கேன் போடும் வேலையும் செய்கிறார். இப்படி கடுமையாக உழைப்பவர் திடீரென்று தான் வாடிக்கையாக பால் விற்பனை செய்யும் வீட்டுக்குள் புகுந்து அங்கிருக்கும் பெண்ணை கொலை செய்கிறார். இந்த கொலை வழக்கை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு வீட்டில் புகுந்து அங்கிருக்கும் தம்பதியை சரவணன் கொலை செய்கிறார். இந்த இரண்டு கொலைகளும் ஒரே பாணியில் நடந்திருப்பதால், போலீஸ் கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்க, மறுபக்கம் சரவணன் அப்பாவியாக அதே ஊரில் வலம் வருகிறார். சரவணன் எதற்காக அவர்களை கொலை செய்தார்?, அவர் தான் கொலையாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே மீதி கதை.

ராட்சசன் சரவணன் மிக நன்றாக நடித்துள்ளார். 

கராத்தே ராஜா சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

இத்திரைப்படம் சமூகத்திற்கு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating: 3 / 5

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை