சற்று முன்



பகலறியான் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான வெற்றி நடிப்பில் பகலறியான்

நடிகை அக்‌ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினு பிரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் முருகன்.

தந்தையை கொலை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்த நாயகன் வெற்றியும், நாயகி அக்‌ஷயா கந்தமுதனும் காதலிக்கிறார்கள். வெற்றி சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதால் அவருக்கு பெண் கொடுக்க அக்‌ஷயாவின் தந்தை மறுக்கிறார். ஆனால், வெற்றி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் அக்‌ஷயா வீட்டை விட்டு வெளியேறி வெற்றியை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கிறார். அதன்படி, அவர் தனது தந்தைக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வெற்றியுடன் பயணிக்கிறார்.

மறுபக்கம் ரவுடியான முருகன், வீட்டை விட்டு வெளியேறிய தனது தங்கையை தேடி அலைய, அவரின் எதிரிகள் அவரது தங்கையை கடத்தி வைத்து, அதன் மூலம் அவரை பழிதீர்க்க முயற்சிக்கிறார்கள். ஒருபக்கம் எதிரிகளை சமாலித்தவாறு தங்கையை முருகன் தேடிக்கொண்டிருக்க, மறுபக்கம் வெற்றி பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வரும் நபரிடம் பணம் பெறுவதோடு, அக்‌ஷயாவுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து அவரை மயக்க நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். வெற்றியின் இத்தகைய செயலை அறிந்துக்கொண்டு அதிர்ச்சியடையும் அக்‌ஷயா என்ன செய்தார்?, வெற்றி இப்படி செய்ய காரணம் என்ன?, ஆபத்தில் இருக்கும் தங்கையை தேடி அலையும் முருகன் அவரை கண்டுபிடித்து காப்பாற்றினாரா? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை பல திருப்பங்களுடன்  ‘பகலறியான்’.

நடிகர் வெற்றி மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

அவரது சினிமா வாழ்க்கையில் இத்திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்துவிடும்.

காதல் காட்சிகள் நன்றாக உள்ளது.

அண்ணன் தங்கை பாசம் அனைத்தும் சிறப்பு.

சண்டை காட்சிகள் மிக நன்றாக உள்ளது.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பாடல்கள் சுமார் தான்.

சண்டைக் காட்சி விரும்பும் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்கும். சஸ்பென்ஸ் திரில்லரசிகளுக்கு திரைப்படம் ஒரு விருந்து.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை