தலைமைச் செயலகம் விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் வெற்றிக்கொடி கட்டும் ஆர் ராதிகா சரத்குமார் அவர்கள் தயாரிப்பில் தலைமைச் செயலகம். வெப் சீரியஸ். இதை ஜி5வில் வெளியிட்டுள்ளனர்.
இதில் நடிகர் பரத், கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், தர்ஷகுப்தா, சந்தான பாரதி, மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார்.
தான் அரசியல் ஆரம்ப தொடக்கத்தில் செய்த ஊழல் ஆளும் in முதல்வரின் கழுத்தை நெருக்க, முதல்வரின் கைத்தடிகள் இந்த சூழலை பயன்படுத்தி அடுத்த முதல்வர் ஆவதற்கு காய் நகர்த்த, அதே நேரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் பன்சால் மற்றும் அவன் கூட்டாளிகள் ஐவரை கொலை செய்து விட்டு தப்பி சென்ற கௌலைகாரி துர்காவை தேடும் வழக்கு போலீஸ் இடமிருந்து சிபிஐ க்கு மாற்றப்படுகிறது. இந்த வட இந்திய மற்றும் தென் இந்திய நிகழ்விற்குமான தொடர்பு என்ன என்பதே இந்த தலைமை செயலகம் வெப் சீரியஸ் கதை.
எப்போதோ செய்த ஊழல் வழக்கில் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் முதல்வர் கதாபாத்திரத்தில் கிஷோர் நன்றாக நடித்திருக்கிறார். தான் சிறை செல்வதை தடுக்கும் முனைப்பில் தன் வீட்டு குழந்தைகள் வாழ்க்கையை சீரழித்து விடுவார்களோ என்கின்ற தவிப்பையும், எல்லோர் முன்னிலையிலும் திருமணத்தை நிறுத்தும் பொது துடிப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். என்னை காப்பாற்ற எவன் காலிலாவது நான் விழ வேண்டும், இல்லை என் கட்சியை அடமானம் வைக்க வேண்டும் இல்லையா..?? என்று கேட்கும் போதும், உங்கள் தலைமுறை கூட ஆண் பெண் நட்பை தவறாகத்தான் பார்க்கிறததா..? என்று கொற்றவையின் மகளிடம் வினவும் போதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கிஷோர்.
கொற்றவையாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி கதாபாத்திரம் மிகச்சிறப்பு ஒரு பத்திரிக்கையாளராக ஒரு ஆலோசகராக விமர்சகராக அனைத்திலும் அசத்தியுள்ளார் ஸ்ரேயா ரெட்டி.
சிபிஐ அதிகாரியாக ஆதித்யா மேனன் நடித்துள்ளார் மிக அற்புதமாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
ரம்யா நம்பீசன் மிக நன்றாக நடித்துள்ளார் முதல்வரின் மகளாக அடுத்து வாரிசாக இருக்க வேண்டும் என்று அவரது கதாபாத்திரம் சிறப்பு.
பரத் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார் மிக நன்றாக நடித்துள்ளார்.
தர்ஷகுப்தா என் கதாபாத்திரம் சிறப்பு.
சந்தான பாரதி நடிப்பு சிறப்பு மிக எதார்த்தமாக நடித்துள்ளார்.
கிஷோருக்கும் ஸ்ரேயா ரெட்டிக்கும் மன கதாபாத்திரம் மிக அழகான நட்பை காண்பித்துள்ளார் இயக்குனர்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
இயக்குனர் வசந்தபாலன் மிக நன்றாக இயக்கியுள்ளார்.
அனைவரும் பார்க்கக்கூடிய வெப் சீரியஸ்.
ஆக மொத்தத்தில் தலைமைச் செயலகம் நம் வீட்டில் ஆளும்.
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை