அரண்மனை 4 திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் பல்முகங்கள் கொண்ட சுந்தர் சி இயக்கத்தில் மற்றும் நடிப்பில் அரண்மனை 4. மற்றும் நடிகை தமன்னா , ராஷி கண்ணா , யோகி பாபு, வி டி வி கணேஷ் , கோவை சரளா, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார்.
10 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிச்சென்று காதல் திருமணம் செய்து கொண்ட தங்கை தமன்னா தற்கொலை செய்து கொண்டதாக அண்ணன் சுந்தர்.சி.க்கு தகவல் கிடைக்கிறது. தங்கையின் கணவர் சந்தோஷ் பிரதாப்பும் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தங்கையின் வீட்டிற்கு செல்லும் அண்ணன் சுந்தர்.சி தனது தங்கையும், அவரது கணவரும் எப்படி இறந்தனர்? தனது தங்கை தங்கியிருந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்களின் பின்னணி என்ன? தனது தங்கை மகளை கொல்லத் துடிக்கும் பேய் யார்? அந்த பேயிடம் இருந்து தனது தங்கை மகளை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் கதை.
இதை மிக சுவாரசியத்துடன் இயக்கியுள்ளார் இயக்குனர்.
காமெடிக்கு பஞ்சம் இல்லை யோகி பாபு வி டி வி கணேஷ் கோவை சரளா மிக அற்புதமாக நடித்துள்ளனர்.
படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு டெல்லி கணேஷ் திரையில் தோன்றியுள்ளார்.
சுந்தர் சி மிக நன்றாக நடித்துள்ளார்.
நடிகை தமன்னா கதாபாத்திரம் மிக அழகாக உள்ளது ஒரு தாயாக வாழ்ந்துள்ளார்.
ராக்ஷி கண்ணா மிக அழகாக உள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 90'கலின் கனவு கன்னி சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இணைந்து குஷ்பூ நடனம் ஆடியுள்ளார்.
இப்பாடல் இப்படத்திற்கு மிகப்பெரிய ஹைலைட்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
இத்திரைப்படம் குழந்தைகளுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது இக்கோடை காலத்தை அரண்மனையுடன் கொண்டாடலாம்.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை