அக்கரன் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் அக்கரன். மற்றும் கபாலி விஸ்வநாத் , நமோ நாராயணன், வெண்பா, ஆகாஷ் , பிரியதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் அருண் பிரசாத்.
அரசியல்வாதி ஆக இருக்கிறார் (நமோ நாராயணன்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்விக் கூடத்தில் பொறுப்பில் இருக்கும் அவனது மனைவியின் மைத்துனன், மாணவர்களுக்கு சீட்டு தரவும் முறையற்று பாஸ் போடவும் அதிகப் பணம் கேட்க, அதை வீடியோ எடுக்கும் பெண்ணால் அவர்களுக்குப் பிரச்னை வருகிறது
அந்தப் பெண் (பிரியதர்ஷினி) கொல்லப்படுகிறாள்.
கொன்றவனைத் தேடி அந்தப் பெண்ணின் தந்தை ( எம் எஸ் பாஸ்கர்) போகிறார் . அவருக்கு இன்னொரு மகள் ( வெண்பா) ; அவளது காதலன் ( கபாலி விஸ்வநாத்)
கட்சி ஆள் ஒருவருக்குப் போக வேண்டிய தேர்தல் சீட்டை மேற்படி அரசியல்வாதி தனது மைத்துனனுக்குத் தர , கட்சி ஆள் கடுப்பாகிறான் . அதாவது நமோ நாராயணனின் ஓட்டுனருக்கு தருவதாக கூறிவிட்டு மைந்தனர் கொடுத்ததினால் அவன் கடுப்படைகிறான்.
இறுதியில் அந்த ஓட்டுனருக்கு அந்த சீட்டு கிடைக்கிறது எப்படி கிடைக்கிறது அந்த மாணவி கொன்றது யார் எம்எஸ் பாஸ்கர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதை ?
இருவரையும் கடத்தி வைத்து உண்மை அறிய முயலும், இறந்த பெண்ணின் அப்பாவிடம் இருவருமே தான் கொல்லவில்லை என்று அடுத்தவர் மேல் பழியைப் போட , உண்மையில் கொன்றவர் யார் என்பதும் அறிந்து அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையே அக்கரன்.
எம் எஸ் பாஸ்கர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது ஒரு தந்தையாகவே வாழ்ந்துள்ளார்.
கபாலி விஸ்வநாத் நன்றாக நடித்துள்ளார்.
நமோ நாராயணன் நடிப்பு சிறப்பு.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
ஆக்சன் திரில்லர் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் விருந்தாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை