கொலை தூரம் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர் நடிகைகள் நடிப்பில் கொலை தூரம் .
நடிகர் யுவன் பிரபாகர் நடிகை சமந்து, ஜெயா மற்றும் அம்பானி சங்கர், ரஞ்சன், பெஞ்சமின், கராத்தே ராஜா, பிரேம் ராஜ், பிரபு , போண்டாமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரபு .
தனது இரண்டு சகோதரிகளுக்கு மணமுடித்து அவர்களுக்கு ஒரு நல்வாழ்க்கையை ஏற்படுத்திவிட்டு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கதாநாயகன் வாழ்கிறான். வெளிநாடு சென்று விடுகிறான் நாயகன். பின் கடுமையாக உழைத்து ஒரு மிகப்பெரிய தொழிலதிபராகிறான். ஆஸ்தி அந்தஸ்து சொத்து எல்லாமே கிடைக்கிறது. தான் வெளிநாட்டில் இருக்கும் போது அவனது நண்பர்கள் அவரது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் தங்கைகளும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தாய் நாட்டுக்கு வருகிறான். பிறந்த மண்ணுக்கு வருகிறான்.தன் இரண்டு சகோதரிகளும் சேர்ந்து பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். கணவன் மனைவி இருவருக்கும் அளவு கடந்த அன்பு செலுத்தி வருகின்றனர். இவ்வேளையில் அவன் மீது கொலைப்பழி ஏற்படுகிறது. அந்த கொலைப்பழியிலிருந்து அவர் மீண்டாரா? யார் கொலைப்பழி ஏற்படுத்தியது? கொலை செய்யப்பட்டவர் யார் ?என்பதை க்ரைம் திரில்லர் சஸ்பென்ஸ்வுடன் கூறும் கதையே கொலை தூரம்.
திரைப்படம் தாய் நாட்டை விட்டு குடும்பத்தை விட்டு மனைவியை விட்டு வெளிநாட்டில் வாழும் அனைவருக்கும் இத்திரைப்படம் ஒரு எடுத்துக்காட்டு.
கதாநாயகன் நன்றாக நடித்துள்ளார்.
தங்கை கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர்.
அண்ணன் தங்கை பாசப் போர் தான் திரைப்படம்.
பாடல்கள் சுமார் தான்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை