ஃபைண்டர் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர் வினோத் ராஜேந்திரன் நடிப்பில் ஃபைண்டர் .
மற்ற நடிகர் நிகழல் ரவி, சார்லி , சென்றாயன், தாரணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைப்படத்தை வினோத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே குற்றவியல் துறை மாணவர்கள் அத்துறைப்பற்றி கூறும் தகவல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர், கொலை வழக்கின் மர்மங்களை தேடி செல்லும் நாயகனின் துப்பறியும் பயணத்தை பரபரப்பாக மட்டும் இன்றி திரில்லிங்காகவும் நகர்த்தி சென்று ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.
இப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் ஒரு புதுமுகம் போல் இல்லாமல் தேர்ந்த நடிப்பை தந்திருக்கிறார். மேலும் ரசிகர்கள் ரசித்து மகிழும் விதத்தில் ஒரு அருமையான படத்தை தந்த விதத்தில் முதல் படத்திலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.
சண்டை காட்சிகள் அனைத்தும் அசத்தியுள்ளார்.
சிறப்பு தோற்றத்தில் நிகழல் ரவி சிறிது நேரம் வந்தாலும் அவர் கொடுத்த வேலையை மிக கச்சிதமாக நகர்த்தியுள்ளார்.
சார்லி ஒவ்வொரு முறையும் அவரது நடிப்பு திறமையை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டுள்ளார்.
அன்று முதல் இன்று வரை நடிகர் சார்லி கதைகளை மிக அற்புதமாக தேர்ந்தெடுத்துக் கொண்டு உள்ளார் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
தந்தை மகள் பாசப்போர்தான் இந்த பைண்டர்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை