சற்று முன்



பசி திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் அறிமுக இயக்குனர் சக்திவேல் தங்கமணி இயக்கத்தில் பசி
பல புது முகங்கள் அறிமுக நாயகர்கள் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் 6 வயது  முதல் 60 வயது வரை என்ன நடந்தது அவரது மனநிலை என்ன மற்றும் மக்களின் நிலைமை என்ன ஒவ்வொரு வீட்டின் சூழ்நிலைகள் என்ன அனைத்தையும் இப் படம் மூலம் இயக்குனர் காண்பித்துள்ளார். இதுவே இப்படத்தின் கதை.



இப்படத்தில் இயக்குனர் ஒரு பத்திரிகையாளராக நடித்துள்ளார் மிக அற்புதமாக கொரோனா காலகட்டத்தில் நடந்த சூழ்நிலைகளை தெளிவாக காண்பித்துள்ளார்.

குடும்பத் தலைவிகளின் மனநிலை என்ன அவர்கள் வரும் கஷ்டம் போராட்டம்
அரசாங்கம் கொடுக்கும் சலுகை பத்தவில்லை வெறும் ஆயிரம் ரூபாய் வைத்து எப்படி குடும்பத்தை காண்பது என்பதெல்லாம் வெளிப்படையாக காட்சி அமைத்துள்ளார்.

சோற்றுக்கே வழியில்லை என்று கூறும் காட்சிகள் எல்லாம் நம் கண்களை கலங்க வைக்கும்.

இயக்குனர் அரசியல் பேசும் வசனங்கள் சிலரை தாக்கியுள்ளார் என்று கூறலாம் மதவாதிகளை திருத்த வேண்டும் என்று அவர் கூறும் வசனங்கள் எல்லாம் சிறப்பு. 


கொரோனா காலகட்டத்தில் 2k கிட்ஸி இவர்கள் மட்டும்தான் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்  காதலியுடன் பேசிக்கொண்டு எந்த ஒரு கவலையும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் இவர்கள்தான். அதை அழகாக காண்பித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் அரசாங்கம் மக்களை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார் இயக்குனர்.

படத்தை நாம் பார்க்கும் பொழுது கொரோனா காலகட்டத்தில்  நமக்கு நடந்த அவையும் உண்டு நம்மால் அதை உணர முடியும் பசி.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம் பசி.

Rating : 3 / 5 




கருத்துகள் இல்லை