ரோமியோ திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர் நடிகர் பல முகங்கள் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ. மற்றும் நடிகை
மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, யோகி பாபு , ஸ்ரீஜா ரவி என மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.
பரத் தனசேகர் இசையமைத்துள்ள இப்படத்தில் ஃபரூக் ஜெ பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனி சொந்தமாக தயாரித்திருந்தார். திரைப்படம் வெளியாகி உள்ளது வெற்றி பெற்றதா இல்லையா என்பதை பார்க்கலாம்.
35 வயதாகியும் லவ் ஃபீல் வந்தால் தான் திருமணம் செய்வேன் என அடம்பிடிக்கும் விஜய் ஆண்டனிக்கும், மிருளாணி ரவிக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால் இந்த திருமணம் மிருளாளினி விருப்பம் இல்லாமல் நடந்ததை உணர்ந்து கொள்ளும் விஜய் ஆண்டனிக்கு, அவர் வாழும் நகரத்து வாழ்க்கை மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் தான், விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தது தவறு என்றும், விவாகரத்து செய்து கொள்ளலாம் எனவும் மிருளாளினி கூறுகிறார்.
மனைவியின் எண்ணத்தை புரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி, தன்னை மிருளாளினிக்கு பிடித்த மாதிரி மாற்ற என்னவெல்லாம் செய்கிறார் என்பதை ரொமான்டிக் காமெடி கலந்து ரோமியோ-வாக எடுத்திருக்கிறார் இயக்குனர் விநாயகர் வைத்தியநாதன்.
இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை
நடிகர் விஜய் ஆண்டனி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மிக நன்றாக நடித்துள்ளார்.
நிஜத்தில் இது போன்ற கணவன் கிடைத்தால் அனைத்து பெண்களுக்கும் சுகம் தான்.
மிருளாணி ரவி கதைக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.நடிப்பு நன்றாக உள்ளது.
யோகி பாபு என் கதாபாத்திரம் சிறப்பு அவர் கூறும் வசனங்கள் எல்லாம் இப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.
விடிவி கணேஷ் ஒரு மாமாவாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனிக்கும் விடிவி கணேசுக்கும் காம்பினேஷன் நன்றாக உள்ளது.
இளவரசு மிக நன்றாக நடித்துள்ளார்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
பாடல்கள் சுமார்தான்.
திரைப்படம் 2k கிட்ஸ்க்கு மிகப்பெரிய விருந்தாக உள்ளது என்று கூறலாம்.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating - 3.5 / 5
கருத்துகள் இல்லை