டியர் (DeAr) திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் அவரது நடிப்பில் டியர். மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ,ரோகினி, காளி வெங்கட், இளவரசு, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர் ”டியர் (DeAr)”. இப்படத்தை
ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
சென்னையில் பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் சேர்ந்து பிரபலங்களை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இவருக்கு குன்னூரில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷூக்கு சின்னதாக சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து எழுந்து விடுவார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல குறட்டை பிரச்சனை ஜி.வி.பிரகாஷூக்கு வேலை போகும் நிலைக்கு தள்ளுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷிடம் விவாகரத்து கேட்கிறார். முதலில் இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மறுக்கிறார். நீதிமன்றம் சில காலம் அவகாசம் கொடுக்கிறது. இதில் குறட்டை பிரச்சினை தீர்ந்ததா?, தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே டியர் படத்தின் கதையாகும்.
ஜிவி பிரகாஷ் குமார் எதார்த்தமாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் மிக அழகாக உள்ளார் அவரது காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைக்கும் மிக நன்றாக நடித்துள்ளார்.
காளி வெங்கட் நடிப்பு நன்றாக உள்ளது கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
ரோகினி மற்றும் தலைவாசல் விஜய் இன் கதாபாத்திரம் நன்றாக உள்ளது இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக நடித்துள்ளனர்.
இளவரசு ஒரு தந்தையாக வாழ்ந்துள்ளார்
அவரது கதாபாத்திரம் சிறப்பு.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது
பாடல்கள் சுமார்தான்.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை