சற்று முன்



ஒரு நொடி திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான தமன்குமார் நடிப்பில் ஒரு நொடி. திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, நிகிதா, ஸ்ரீரஞ்சனி, கருப்பு நம்பியார், தீபா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் மணிவர்மன்.

  முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை மிக அதிகம் கவர்ந்த நிலையில், “ஒரு நொடி” படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் .

ஒரு நொடியில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அல்லது நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையே புரட்டிப் போடும் என்ற அடிப்படை தத்துவத்தை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்துவதற்காக கடன் வாங்கி அதற்கு பதிலாக வேல ராமமூர்த்தியிடம் தன்னுடைய நிலத்தை அடமானம் வைக்கிறார் எம்.எஸ். பாஸ்கர். குறித்த காலத்திற்குள் பணத்தை தயார் செய்து அவர் திரும்ப கொடுக்கப் போகும் நேரத்தில் காணாமல் போகிறார். இதுதொடர்பாக எம்.எஸ். பாஸ்கர் மனைவி ஸ்ரீரஞ்சனி காவல்துறையில் புகார் அளிக்கிறார். இந்த வழக்கை இன்ஸ்பெக்டரான தமன்குமார் விசாரிக்கும் நிலையில், இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் தமன்குமார் உண்மையை கண்டறியும் முயற்சியில் இறங்க, அடுத்தடுத்து எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கிறது. உண்மையில் இரண்டு சம்பவங்களிலும் நடந்தது என்ன?  என்பதை தொடக்கம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் திரில்லராக சொல்லி இருக்கிறார் இயக்குனர். இறுதியில் தமன்குமார் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை ?

நடிகர் தமன் குமார் நடிப்பு சிறப்பு ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு காவல்துறை அதிகாரியாக ஆக்டிவாக செயல்பட்டுள்ளார்.

இப்படத்திற்கு எம் எஸ் பாஸ்கர் பக்க பலமாக அமைந்துள்ளார் சிறிது நேரம் வந்தாலும் கதை அவரை நோக்கி தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

வேல ராமமூர்த்தி கதாபாத்திரம் சிறப்பு. இறுதியில் அவர் என்ன ஆனார் என்பது தான் ஒரு சின்ன கேள்விக்குறி. காணாமல் போய்விட்டார்.

 நிகிதா காதல் காட்சிகள் நன்றாக உள்ளது. அழகாக உள்ளார் அவரது கதாபாத்திரம் எதார்த்தமாக உள்ளது நடிப்பு சிறப்பு.

பழ கருப்பையா ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் தான் ஒரு அரசியல்வாதி என்று கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பாடல்கள் பெரிதாக இல்லை.

திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை