சற்று முன்



ஆலகாலம் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஈஸ்வரி ராவ் கௌரவத் தோற்றத்தில் மற்றும் ஜெய் சாந்தினி நடிப்பில் ஆலகாலம் 

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஜெய கிருஷ்ணமூர்த்தி நடித்து, இயக்கியுள்ளார்.

நாயகன் ஜெய் -ன் அப்பா கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிடுகிறார். இதனால் நாயகனின் அம்மா யசோதா ஒரு முடிவு எடுக்கிறார், தன் மகனை நன்றாக படிக்கவைத்து பெரிய ஆளாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு, மகனை குடியின் பக்கம் செல்லாதவாறு பார்த்துக்கொள்கிறார்.

மேல்படிப்புக்காக திருச்சியில் உள்ள ஒரு கல்லூரிக்கு வருகிறார். வந்த இடத்தில தமிழ் என்ற பெண்ணை காதலிக்கிறார். இதனை கவனித்த தமிழின் ஒருதலை காதலன் ஜெய்யை குடிக்க வைத்து கெட்டவனாக மாற்றுகிறார். ஒரு கட்டத்தில் ஜெய்க்கும், தமிழுக்கும் ரகசிய திருமணம் நடக்கிறது. இதற்கடுத்து இவர் குடியை விட்டாரா? இல்லையா? என்பதும் ஜெய் தன் அம்மாவின் கனவை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

ஈஸ்வரி ஒரு தாயாக வாழ்ந்துள்ளார் கணவனை இழந்து வாழும் அவர் மகனை எப்படி வளர்க்க வேண்டும் என்று வளர்க்கிறார் ஆனாலும் மகன் இப்படி ஆகிவிடுகிறார் என்று அவர் எடுக்கும் இறுதி முடிவு அனைவரையும் கலங்க செய்யும்.

மிக நன்றாக நடித்துள்ளார்.

சாந்தினி மிக அழகாக உள்ளார் சிறப்பாக நடித்துள்ளார்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை