சற்று முன்



மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ்:முதன்மையான 12 போட்டியாளர்கள் பெயர் அறிவிப்பு !


மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ்: 

சுவையும், பாரம்பரியமும் கலந்த உணர்ச்சிகரமான பயணத்தில் 

முதன்மையான 12 போட்டியாளர்கள் பெயர் அறிவிப்பு ! 

வீட்டில் சமைக்கும் ஒரு நபர் மாஸ்டர்செஃப் சமையலறைக்குள் கால் பதிக்கும்போது, அவரது பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற மேலங்கியை பெருமையுடன் அணிவது தான் அவரது / அவளது பெருவிருப்பமாக இருக்கும்.  மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் – ன் சமீபத்திய எபிசோடில், அப்போட்டியில் பங்கேற்கும் முதன்மையான 12 போட்டியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த சுவையான நிகழ்ச்சி ஒரு முக்கிய தருணத்தை எட்டியிருக்கிறது. 

இவர்களை தேர்ந்தெடுப்பதற்கான செய்முறையை ஒரு தனிச்சிறப்பானதாகவும், வித்தியாசமானதாகவும் ஆக்கியிருப்பது நடுவர்களால் தரப்படும் ஃபிளிப் தி போர்டு என்ற ஒரு தனித்துவமான சவாலாகும்.  தங்களது தோற்றத்தையே கண்ணாடி பிரதிபலிப்பில் பார்க்குமாறு இந்த சமையல் கலைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  தங்களது வெட்டுப்பலகையை திருப்பும்போது அவர்களது தோற்றத்தையே அவர்கள் பார்க்க நேர்ந்தது.  ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் அவர்கள் தொடங்கிய இந்த பயணத்தின் ஒரு நினைவூட்டலாக இது அமைந்தது.  அவர்களது சமையல் திறன்களை காட்சிப்படுத்துவது மட்டுமின்றி, ஒரு தனி நபராக அவர்களது ஆளுமையின் சாரத்தையும் வெளிப்படுத்துகின்ற ஒரு உணவை நேர்த்தியாக உருவாக்குவதே அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலாகும்.  

அவர்களது அடையாளத்தையும், ஆளுமையையும் நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் உணவுகளை (டிஷ்) உருவாக்குவதில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட திறன்மிக்க 18 போட்டியாளர்களில் எஞ்சியவர்களை விட ஒருவரது பெயர் தனித்துவமானதாக ஒளிவீசி பிரகாசித்தது.  பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு சிறப்பான பெண்மணியான கவிதா என்ற அன்னையே அவர்.  அந்த பெண்மணி சமைத்த உணவுப்பொருள் என்ன? அது வெறுமனே ஒரு உணவு மட்டுமல்ல.  அவரது குழந்தைகள் மீது அவர் கொண்டிருக்கும் அன்பு மற்றும் பாசத்தின் இதயப்பூர்வமான வெளிப்பாடாக அது இருந்தது. 

மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் கிச்சன் நிகழ்ச்சியில் தனது தொடக்கம் குறித்து பேசிய திருமதி. கவிதா, “மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இடம்பெறுவதில் நான் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறேன்.  தனது குழந்தையுடன் மீண்டும் நான் இணைவதற்கு நம்பிக்கையின் ஒளிக்கீற்றை வழங்கும் ஒரு நிகழ்வாக இந்த ரியாலிட்டி ஷோ இருக்கிறது.  நான் சமைக்கும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் வெறும் சேர்க்கைப்பொருட்களை மட்டும் நான் கலப்பதில்லை.  எனது வாழ்க்கை கதையை, எனது அன்பை மற்றும் எனது கனவுகளையும் அதனோடு கலந்தே அவற்றை உருவாக்குகிறேன்.  குழந்தையிடமிருந்து பிரிந்திருக்கும் ஒரு அன்னையாக எனது மகன் மீது நான் கொண்டிருக்கும் நிபந்தனையற்ற அன்பையும், எனது தேடலையும், எனது பலத்தையும் நான் சமைக்கும் உணவில் ஒவ்வொரு சுவையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.  எனது மகன் ஹரிபிரதீஷ் ஜெயந்த் – க்கு மிகவும் பிடித்தமான வெள்ளரிக்காய் பிஸ்கட்டையும் மற்றும் வெள்ளரிக்காய் சாலட்டையும் கடாய் கிரேவியோடு தயாரித்து நடுவர்கள் முன்பு வழங்கியபோது அது வெறும் உணவுப்பொருளாக மட்டும் இருக்கவில்லை; ஒரு தட்டின் மீது வைக்கப்பட்ட எனது இதயமாகவே அது இருந்தது.  அந்த உணர்வுதான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.  அனைத்து சவால்களையும், சமையலறையிலும் கூட உண்மையான அன்பு வெற்றி கொள்ளும் என்பதை அது நிரூபிக்கிறது.” என்று கூறினார். 

போட்டி மேலும் சூடுபிடிக்கையில், சமையல் கனவுகள் சிறகு விரித்து பறக்கின்றபோது மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சி அதன் முதன்மையான 12 இல்ல சமையற் கலைஞர்களை பெருமையுடன் வரவேற்கிறது.  அவர்களது தனித்துவமான சுவைகள், கதைகள் மற்றும் ஆர்வங்களை தாங்கள் தயாரிக்கும் உணவுகளை நேர்த்தியாக வெளிப்படுத்துமாறு அழைக்கிறது.  மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக விருதை வென்று புகழின் உச்சியை எட்டுகின்ற இந்த சுவையான பயணத்தில் அவர்கள் விடாமுயற்சியோடு பயணிக்கும் பயணத்தில் அதை கண்டு ரசிக்க தவறாமல் இணைந்திடுங்கள்.  

திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் பிற்பகல் 1 மணிக்கு சோனி லைவ் அலைவரிசையில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியை கண்டு ரசியுங்கள்.


கருத்துகள் இல்லை