சற்று முன்



காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா! திரு. ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார் !

சுகாதார பராமரிப்பில் நிலைமாற்றம்: வடபழனி, ஆற்காடு சாலையில்

காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா!

திரு. ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார் 

சென்னை, 20 மார்ச் 2024: சென்னையில் சுகாதார சேவையில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக வடபழனி ஆற்காடு சாலையில் தனது புதிய உயர்நிலை மருத்துவ வளாகத்தை காவேரி மருத்துவமனை இன்று தொடங்கியிருக்கிறது. பிரபல திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் இத்தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும்  செயலாக்க தலைவர் டாக்டர். எஸ் சந்திரக்குமார், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். எஸ் மணிவண்ணன் செல்வராஜ், மற்றும் இக்குழுமத்தின் இணைநிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த புதிய மருத்துவமனையில் 9 உயர்சிகிச்சை நேர்த்தி மையங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு நிகரற்ற மருத்துவ சேவை வழங்குவதில் இக்குழுமம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. 

நான்காம் நிலை சிகிச்சை பராமரிப்பு மையமாக வடபழனி காவேரி மருத்துவமனை உயர்நிலை அந்தஸ்தை பெற்றிருக்கிறது. சிக்கலான உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் புதுமையான மருத்துவ செயல்முறைகளை துல்லியத்தோடும், பரிவன்போடும் மேற்கொள்ளும் மிக உயர்ந்த அளவிலான சிறப்பு மருத்துவ மையமாக இது செயல்படுகிறது என்பதையே இது குறிக்கிறது.

250 படுக்கை வசதிகளைக் கொண்ட இம்மருத்துவமனையில், 75 படுக்கைகளுடன் கூடிய உயிர்காக்கும் தீவிர சிகிச்சைப்பிரிவு (CCU), 30 படுக்கை வசதிகளுடன் கூடிய உறுப்புமாற்று சிகிச்சைக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் லேமினார் ஃபுளோ-உடன் கூடிய 6 மாடுலர் அறுவைசிகிச்சை அரங்குகள் உட்பட அனைத்து வசதிகளும், நவீன சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. 

“இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை, எலும்பியல் மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை, இதய அறிவியல், நரம்பியல், கருவள சிகிச்சைகள், நோயறிதல் மற்றும் இடையீட்டு கதிரியக்கவியல் மற்றும் அவசரநிலை சிகிச்சை ஆகியவற்றிற்கான சிறப்பு உயர்நேர்த்தி சிகிச்சை மையங்களுடன், துல்லியம், நிபுணத்துவம் மற்றும் பரிவன்போடு மிக சிக்கலான மருத்துவ சிக்கல்களுக்கு சிகிச்சை மூலம் தீர்வுகாண நாங்கள் முழு தயார்நிலையில் இருக்கிறோம்.” என்று காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். S. அரவிந்தன் செல்வராஜ் கூறினார். 

“நான்காம் நிலை உயர்சிகிச்சை வழங்குநராக வடபழனி – காவேரி மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டிருப்பது, மிக உயர்ந்த நிலையில் மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்குவதில் காவேரி மருத்துவமனைகள் குழுமம் காட்டும் அர்ப்பணிப்பையும், நிபுணத்துவத்தையும் வலுவாக கோடிட்டுக் காட்டுகிறது.  தனிச்சிறப்பான சிகிச்சையையும், மிக நவீன உடல்நல பராமரிப்பு தீர்வுகளையும் வழங்குவதில் உயர்மேண்மை நிலையை எட்டவேண்டும் என்பதில் இம்மருத்துவமனை காட்டி வரும் பொறுப்புறுதி, புதுமையான சிகிச்சை பராமரிப்பின் நம்பிக்கையளிக்கும் கலங்கரை விளக்கமாக இதன் நிலையை வலுப்படுத்துகிறது.” என்று இத்தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரபல திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் கூறினார். 

அனைத்து தரப்பு மக்களும் அணுகிப் பெறக்கூடிய விதத்தில் மிதமான கட்டணத்தில் மிக உயர்ந்த சிகிச்சைப் பராமரிப்பை வழங்குவதில் வலுவான பொறுப்புறுதியை கொண்டிருக்கும் காவேரி குழுமம், கனிவோடும், நேர்மையோடும் நிகரற்ற மருத்துவ சேவையை வழங்க தொடர்ந்து முனைப்புடன் செயலாற்றும்.  ஆழமான நம்பிக்கையை தனது மைய செயல்பாடாக கொண்டிருக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமம், சூழ்நிலைகளும், பின்புலங்களும் எப்படியிருப்பினும் அனைவருக்கும் கனிவான உயர்தர சிகிச்சையை வழங்குவதில் உறுதி கொண்டிருக்கிறது. அனுபவமும், நிபுணத்துவமும் கொண்ட மருத்துவ நிபுணர்கள், கனிவான சேவையை வழங்கும் செவிலியர்கள், அர்ப்பணிப்பு மிக்க தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் ஆகிய அனைவரின் ஒத்துழைப்போடு மக்களின் வாழ்க்கையில் சிகிச்சை மூலம் வெளிப்படையாகத் தெரியக்கூடிய மாற்றத்தை உருவாக்கும் உயர்சிகிச்சை மையமாக முனைப்புடன் செயல்படுவதில் வடபழனி காவேரி மருத்துவமனை தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறது.   


கருத்துகள் இல்லை